திராவிட முன்னேற்றக்கழகம் ஏன் தோற்றது???
காலையில் சகோதரி ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன்.அப்பொழுது அவர் தி.மு.க தோற்றதற்கான முக்கியமான காரணம் என இரண்டை பட்டியலிட்டார். அதைக் கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது.கலைஞர் யோசிக்காமல் இவற்றை சொல்லிவிட்டாரம். கொஞ்சம் கூட யோசிக்கவில்லையாம். அந்த இரண்டு காரண்ங்கள் இவை தானாம்...!
1:கலைஞர் யோசிக்காமல் பால் விலையை குறைத்துவிடுவேன் என அறிவித்துவிட்டாராம். இதனால் அண்ணாமலை பால்கார வகையறா குடும்பங்கள் தி.மு.க விற்கு எதிராக வாக்களித்துவிட்டார்களாம். கண்களில் கோபம் கொப்பளிக்கிறதா... பிளீச் நெக்ஸ்ட் ரீசனையும் படித்துவிடுங்கள்.
2:மாதம் தோறும் ஈ.பி பில் கட்டலாம் என்ற அறிவிப்பால் மின்துறையில் உள்ள ஊழியர்கள் எங்கு தங்களுக்கு பணிச்சுமை அதிகமாகிவிடுமோ என அச்சப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, காஞ்சிப்பட்டு, கல்யாணப் பட்டு .....என பலப் பட்டுகளைப் பட்டு , தங்கள் குடும்பத்தோடு எதிரணிக்கு ஓட்டு, நோட்டு வாங்கிக்கொண்டு போட்டுவிட்டார்களாம்.
இதையெல்லாம் கேட்டபிறகு சகோதரியாரின் அவதானிப்பைக்கண்டு லைட்டாக மயக்க நிலைக்குப் போனேன். அவரை பாராட்டுவதா? இல்லை, அவர் அறியாமையை எண்ணி துக்கப்படுவதா என்று தெரியவில்லை.ஒரே குழப்பத்தோடு பதிலேதும் சொல்லாமல் அந்த இடத்தை காலி செய்துவிட்டேன்.அந்தத் திட்டங்களால் பாதிக்கப்படுபவர்கள் மிக சொற்பமே.!! பயன் பெறுவோர் எண்ணிக்கை சிலபல கோடிகளைத்தொடும்.பிறகெப்படி சகோதரி இப்படி கூறினார் என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை.! இதையெல்லாம் விட கொடுமை அவர் பெயருக்குப் பின்னால் சில, பல டிகிரிகளைப் பெற்றவர்.அவரே இப்படி கண்ணாபின்னாவென சிந்திக்கிறார் என்றால், படிக்காத பாமரர்களை எண்ணிப் பார்க்கிறேன். கவலையே மிஞ்சுகிறது.!!!!
Comments
Post a Comment