பேஸ்புக்கும், பிரண்ட் ரெக்வஸ்ட்டும்..!!!!


பேஸ்புக் ஓப்பன் செய்த நேரம் , ஒரு புதிய பிரண்ட் ரெக்வஸ்ட்... பர்த்த நொடியில் திடுக் என தூக்கிவாரிப் போட்டது. அதற்கு காரணம் அந்த ஐ.டி யின் பெயர் தான்.” அலியா பெல்லா அயிலா”. இது என்னடா புது தினுசா இருக்கே!!!. நமக்கு இந்த ஐரோப்பிய, ஆப்பிரிக்க,அமெரிக்க கண்டங்களில் யாரும் பழக்கமில்லையே! பிறகெப்படி இந்த ரெக்வஸ்ட். பேக் ஐடி யாகத் தான் இருக்கும் என அவதானித்து , உள் நுழைந்து அவரது அக்கவுண்டை ஆராய ஆரம்பித்தேன். முதலில் மியூச்சுவல் பிரண்ட்ஸ் பார்த்தேன். நல்ல வேளை எனது முக்கிய நண்பர்கள் தான் பிரண்டாக இருந்தார்கள். அவர்கள் பெண்பித்தர்கள் எல்லாம்இல்லை . அதிக நண்பர்களை வைத்துக்கொள்ளவும் ஆசைப்படுவதில்லை.ஆக ஏதோ நமக்கு நல்ல பரிச்சயமான பய புள்ள தான் ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தப் பாத்துட்டு இந்த பெயர் மாற்றம் செய்திருக்கிறது என நினைத்துக்கொண்டேன். பிரண்ட் ரெக்வஸ்ட்டை அசப்ட் செய்தேன்.

திடீரென அந்த ஐடியில் இருந்து . ‘ஹே லூசூ எப்படி இருக்க..?’ என மெசெஜ். ரைட் நமக்கு தெரிஞ்ச பயபுள்ள தான். நான் ஒன்றும் தெரியாதது போல, ‘என்னப்பா இது பேரு?’ எனக் கேட்டேன். அது எம்மதத்துக்கும் ஒத்துப் போகும் பெயராம். அது எப்படி எனக் கேட்காதீர்கள். ஆலியா என்பது  இஸ்லாம் பெயராம்.பெல்லா கிறிஸ்தவ பெயராம். ஆயிலா ஹிந்து பெயராம். இதயெல்லாம் விட அதற்கான அர்த்தம் , அசர வைத்தது. ஆலியா என்றால் நிலவாம்,பெல்லா என்றால் அழகாம்,ஆயிலா என்றாலும் நிலவாம். என்னமா தின்சு தினுசா பேரு வைக்குறானுங்க..!டேய் நீங்கலாம் நல்ல வருவீங்க டா...!

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!