பேஸ்புக் தத்துவபித்துக்கள்...!


சமீபகாலமாக பேஸ்புக் செல்லவே பயமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் தத்துவ குவியல். எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஒன்று அல்லது இரண்டு அவ்ரேஜ் லைக்குகளைப் பெற்று தேர்ச்சி அடையும். மற்றவை மயானத்தில் தூக்கி வீசப்பட்ட பைசா கணக்காக கண்டு கொள்ள ஆள் இருக்காது. திடீர் திடீர் தத்துவ, கவிதை மற்றும் ஜோக்ஸ் மானிடர்கள்  பேஸ்புக்கில் பிறப்பெடுப்பார்கள்.  இதோ என் பேஸ்புக் நிலைத்தகவலில்  தோழி ஒருத்தி கடி ஜோக் என ஒன்றை பதிவு செய்திருக்கிறாள். எனக்கு அது டபுள் மீன்ங் ஜோக்காகவே படுகிறது. அவ்வளவு சிறப்பெல்லாம் கிடையாது. சுமார் ரகம் தான். தோழி இதற்கு முன்பு இந்த மாதிரி ஸ்டேட்டஸ் எல்லாம் போட்டது கிடையாது.திடீர் ஆண் எதிர்ப்பாளர் வேறு ஆகிவிட்டார். எல்லாம் இந்த ஓலா டிரைவர் பஞ்சாயத்துக்கு அப்புறம் தான்.  இந்த லைக்ஸ் மோகம் பெண்களை எப்படி வாட்டி எடுக்கிறது பாருங்கள். இது எங்க போய் முடியப் போகுதோ...!

பி.கு: வழக்கம் போல ஸ்கீரீன்ஷாட்  உங்கள் பார்வைக்கு.

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!