முதல் கலப்புத் திருமணம்...!!!!


இந்த உலகில் இன்னும் விடைத் தெரியா கேள்விகள் ஆயிரம் உண்டு , அதில் அதிகம் விவாதிக்கப் பட்டது கோழியில் இருந்து முட்டை வந்ததா? , இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற கேள்வியாகும். அதன் பொருட்டு வரலாற்றை சற்று கிளறியதில் கிடைத்த பதில் தான் நம் தலைப்பிற்கான காரணம்.

கிட்டத்தட்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜூராசிக் காலத்திலேயே டைனோசர் வகையறாக்கள், முட்டையிட்டு குஞ்சி பொறித்தது என்பதை ஜூராசிக் படம் பார்த்த அத்தனை பச்சிளம் குழந்தைகளும், தாத்தா பாட்டிகளும், அங்கிள்களும் , ஆன்டிகளும் ஒரு மனதாக ஒப்புக் கொள்வார்கள். அந்த காலத்தில் அதாவது ஜூராசிக் காலத்தில் நமது நாட்டுக்கோழி வகையறாக்கள் பிறந்திருக்கவில்லை அல்லது உருவாகியிருக்கவில்லை.   இங்கே முக்கியமான ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன். கோழி உருவாவதற்கு முன்பே முட்டையிடும் கலாச்சாரம் தோன்றிவிட்டது.

பாலூட்டிகள் கூட முதலில் வயிற்றில் உருவாகும் கருமுட்டை மூலமே குட்டிகளை ஈனுகின்றன. ஆக மொத்தத்தில் கோழிக்கு முன்னரே முட்டை இருந்திருக்கிறது யுவர் ஆனர். சரி , நம்ம கோழி எப்படி பிரந்தது எனப் பார்க்கலாம். காட்டிலே வாழ்ந்த red jungle fowl & grey jungle fowl என்ற இரண்டு வேற்று ஜாதிக்கர பறவைகள் கசமுசா செய்து உருவானதே நாம் இப்பொழுது பார்க்கும் கோழியினம்.
ஆகையால் மனிதன் கலப்புத் திருமணம் பற்றி பேசுவதற்க்கு முன்பே வெறும் ஐந்தறிவு படைத்த கோழியின் மூதாதையர்கள் கலப்புத்திருமணம் செய்து, இந்த அற்ப மானிடப்பதர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்த வயதில்லாத காரணத்தால் அவர்களது சந்ததியான நாட்டுக் கோழிகளை வளர்த்து, அடித்து சுவைத்து நாம் நம் நன்றிக் கடனை செலுத்துவோமாக...!!!! ஆமென்...!!!!

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!