கேவர்..!!!(ghevar)
கேவரை தேவர் என்று மாற்றிப்படித்தால் கம்பெனி பொறுப்பாகாது. சரி என்னப்பா அது கேவர் என விளிக்காதீர்கள். பணி நிமித்தமாக வட இந்தியா வந்ததில் இருந்து சாப்பாடு ஒரு பெரிய தொல்லையாக இருக்கிறது. வெறும் ரொட்டி மற்றும் கச்சோரி தான்.
நாளைக்கு மூன்று வேளையெல்லாம் இவர்கள் சாப்பிடுவதில்லை. ரொட்டி சாப்பிட்டா எங்கங்க பசிக்கும். அரிசி வகையறாக்களை உண்டு வளர்ந்த நமக்கு தான் அரைமணி நேரத்துக்கெல்லாம் பசி. இருக்கக் கூடிய ஒரே ஆறுதல் கிடைக்கக் கூடிய இனிப்பு வகைகள் தான்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசு. வெளியில் செல்லும் போதெல்லாம் ஒவ்வொரு இனிப்பு வகையாக ருசி பார்க்கலாம் என முடிவெடுத்து செயல்படுத்தலானேன்.
வட்டமாக ஒன்று கண்ணில் பட்டது. என்னப்பா அது என விசாரித்த போது, முதலில் நானும் இவர்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு தேவர் என்றே தப்பு தப்பாய் சொல்லி வந்தேன். பிறகு கூகுளாண்டவர் தான் ஆங்கிலத்தில் சரியான உச்சரிப்பை சொல்லித் தந்தார். சுவை அடி தூள் வகை தான். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் சுவைத்துப் பாருங்கள். அதனுடைய புகைப்படத்தை பின்ணிணைப்பாக இணைத்துள்ளேன். செர்ரி பழங்களையெல்லாம் மேலே தூவி, பார்க்கவே கலர்புல்லாக இருக்கிறது.
Comments
Post a Comment