அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!
"யார் கண்டுபிடித்தது? யார் சொல்லியது? யார் பேச்சைக்கேட்டுப் பின்பற்றுகிறார்கள்?" என்று தான் தெரியவில்லை. புதிது புதிதாக எதையாவது தூக்கிக்கொண்டுத்திரிகிறார்கள். "ஏன்? எதற்கு? என்ற சொற்கள் எல்லாம் தடைசெய்யப்பட்டுவிட்டதா?" என்றெல்லாம் கூட யோசிக்கத் தோன்றுகிறது. என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்றெல்லாம் கேள்வி கேட்காமல், எல்லாவற்றையும் செய்யும் ஒரு அடிமைக்கூட்டமாய் பெரும்பான்மை சமூகம் எப்படி இருக்க முடியும்? முடிகிறது. கண்ணெதிரே உயிருள்ள ஜடமாய் ஆறறிவு மனிதனென பெருமைப்பீற்றிக் கொண்டே நடமாடிக்கொண்டிகிறது. கடவுள் விடயத்தில் கேள்வி கேட்டால் மனம் புண்படுகிறது என்று ஒரே போடாய் போட்டுவிடுகிறார்கள். மறுகேள்விக்கு மனம் வராது. போய்த்தொலைகிறது அவரவர் நம்பிக்கை என்று விட்டால், இன்று எல்லாவற்றிற்கும் அதையே தூக்கிகொண்டு வருகிறார்கள். ஆங்கிலப்புத்தாண்டு என்ற ஒன்று வருகிறது. ஒரே பரபரப்பு. பட்டையும் கொட்டையுமாய் ஒரு கூட்டம். பாட்டிலும், ஆடலும், பாடலுமாய் ஒரு கூட்டம். அவரவர் இஷ்டம். குறையொன்றுமில்லை. இதோ, இன்று தமிழ்ப்புத்தாண்டு. ஆங்கிலப்புத்தாண்டு போல் அவரவர் விருப்பத்திற்கு கொண்...