சங்கிகளின் கதறல் ..!
சங்கிகள் என்றாலே கதறல் , கதறல் என்றாலே சங்கிகள் என்பது மாமாங்கமாய் பார்த்து வரும் ஒன்று தான்.இருப்பினும் இந்த சங்கிகளால் மட்டும் எப்படி ஓவ்வொரு முறையும் சீசனுக்கு சீசன் நாயின் குரைச்சல் மாறுவது போல் மாற்றி மாற்றி கதறி அசரடிக்கமுடிகிறது என்பது ஓர் உலக வியப்பே! சமீபத்திய டவுசர் ஒன்றின் பினாத்தல் தான் அசரடித்தது . பேச்சு வாக்கில் டவுசரிடம் தமிழகம் பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறியதோடு மட்டுமல்லாமல்,தமிழக பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஆண்களின் அணுகுமுறை மற்றும் வளர்ப்புமுறையே காரணம் என்று சொல்லித்தொலைத்தாலும் தொலைத்தேன் . வெகுண்டெழுந்து விட்டார் திரு சங்கியார் அவர்கள்.
- தமிழக ஆண்கள் எல்லாம் சுய புத்தி இல்லாமல் பெண்கள் பேச்சை கேட்டு நடப்பவர்களாம்.
- பெண்களுக்கு தாமதமாய் திருமணம் நடத்தி வைப்பவர்களாம்.
- குடும்பத்தின் அத்தனை முடிவுகளையும் பெண்களே எடுக்கிறார்களாம் .
- தமிழக ஆண்கள் அவர்களுக்கு கட்டுப்பட்டே செயல்படுகிறார்களாம் .
- நாடாளுமன்ற தேர்தலில் மோடி எனும் ஆணை தோற்கடித்து , ஜெயலலிதா எனும் பெண்மணியை வெற்றி பெற வைத்தவர்களாம் .
- எல்லாவற்றுக்கும் மேல் பெண்களைப் படிக்க வைப்பவர்களாம்.இந்தியாவில் வேலைக்கு பெருவாரியாக செல்பர்கள் தமிழக பெண்களாம்.
- ஹிந்துத்துவ கொள்கைகளை மறுப்பவர்கள் அல்லது முற்றிலுமாக புறம்தள்ளுபவர்கள் தமிழகப் பெண்களாம்.
பெண்களைப் பற்றிய இந்த சங்கி கப்பீஸ்களின் நினைப்பே அவர்களை ஒரு நாள் வீழ்த்தும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தேயில்லை.
Comments
Post a Comment