எதை செஞ்சாலும் இந்த உலகம் நம்மள உத்துப்பார்க்கணும்...!!
பலநேரங்களில் நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன் வடிவேலுவின் அத்தனை கதாபாத்திரங்களும் அச்சு அசலாக நம் ஜி யால் நகலெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. வடிவேலு அவர்கள் நினைத்தால் ஜி மீது வழக்குப்போடலாம். நஷ்ட ஈடு கேட்கலாம்.
வின்னர் படத்தில் வடிவேலு நடத்திய வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வெற்றிக்கரமான வெர்சன் தான் நம் ஜி யின் பாஜக. கூட்டிக்கழித்தெல்லாம் பார்க்க வேண்டாம்,நேராக பார்த்தாலே அப்படித்தான் இருக்கிறது.
வடிவேலு சொல்லும் வசனம் தான்,"நாம என்ன செஞ்சாலும் இந்த உலகம் நம்மள உத்துப்பார்க்கணும்". இதை ஆதர்சமாகக்கொண்டே ஜி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். எங்கு சென்றாலும் தன்னை விளம்பரப்படுத்திக்க தவறியதேயில்லை. சாதனை என்று ஓயாமல் ஜோக்குகளை உதிர்ப்பதில் வல்லவர். உலகமே காறித்துப்பும் ஒரு விஷயத்தை அவரும்,அவர் சகாக்களும் சாதனையாகப்பார்ப்பது கண்கூடு.
பாபர் மசூதியை இடித்து பல ஆயரக்கணக்கானோரை கொன்று,நீதி கேட்டவர்களை மிரட்டி,ஒடுக்கி ஒருவழியாக "பூஜா கராணாகே" எனஅவர் அப்பரசிண்டிகளின் கோரிக்கையை ஒரு வாராக தன் ராஜபாராக்கிரம உத்திகளைப்பயன்படுத்தி நிறைவேற்றிக்காட்டியிருக்கிறார். அறிவிருப்போருக்கு நன்குத் தெரியும். இது ஒரு பம்மாத்து வேலை,ஏமாற்று வேலை,கேவலமான வேலை,வெட்டி வேலை,மனிதாபிமானமற்ற வேலை....என. சான்றோர் காறித்துப்பினாலும்,சகல நாடுகள் காறித் துப்பினாலும், துடைத்து தூரப்போட்டுக்கொண்டே போவதில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அவரும் அவர் சார்ந்த கட்சியினரும். பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு கோவில் கட்டுவதே ஒரு மட்டமான செயல்,அதற்கு மகா மட்டமாக விளம்பரம் வேறு. உள்ளூர் விளம்பரம் பத்தாது என நியு யார்க் டைம் ஸ்கொயரில் விளம்பரம்.
வில்லையும் அம்பையும் பார்த்து ஏதோ கார்ட்டூன் படம் போல என நினைத்து அமெரிக்கன்ஸ் அனுமதி கொடுத்திருக்கலாம். உண்மையை சொல்லி தான் அனுமதி வாங்குனீங்களா? இல்லை வழக்கம் போல ஜிலேபி சுட்டீங்களா? உண்மையை சொல்லியிருந்தா உதை விழுந்திருக்கும். நிச்சயம் கார்ட்டூன்னு தான் சொல்லியிருப்பானுங்க....!!
Comments
Post a Comment