மோதி ஜி யின் புதிய இந்திய சுதந்திர வரலாறு?
வரலாற்றில் ரொம்பவே வீக்கான நம் ஜி நேற்று சொல்லிய ஒன்று இன்றும் என்னைப்பிராண்டிக் கொண்டுள்ளது.
ராமருக்கு கோவில் கட்டுவதை, அதற்காக நடந்த,நடத்திய திட்டமிட்ட வன்முறைகளை இந்திய சுதந்திரப்போராட்டத்தோடு ஒப்பிட்டு ஒரு குண்டு செலவில்லாமல் தேசத்துக்காக உயிர் விட்ட தியாகிகளை கருணையே இல்லாமல் சுட்டுத்தள்ளியிருக்கிறார் நம் ஜி. இதுவரை யாரும் அவரை இந்த ஒப்பீட்டுக்காக கண்டித்தது போல் தெரியவில்லை.
சுதந்திர போராட்ட வீர வரலாற்றை, சில ஆயிரம் மத வெறி பிடித்த வாணரங்கள் செய்த வன்முறையோடு ஓப்பிடுவது எந்த வகையில் நியாயம்? ஒரு வேளை ஜி யின் புதிய இந்தியாவில் நியாய தர்மங்களும் மாறிவிட்டிருக்கும் போல.
சாதி,மத,மொழி,இன வேறுபாடு கடந்து நடந்த சுதந்திர போர் எங்கே?
வன்முறை,கலவரம்,மதவெறி,சாதிவெறி,மொழிவெறி என இருக்கும் அத்தனை கெட்ட விஷயங்களின் துணையோடு இவர்கள் செய்திருக்கும் ராம ராஜ்ஜிய அக்கப்போர் எங்கே?
ஏணி அல்ல ஏழுகடல் அளவு வைத்தாலும் எட்டாது. நாட்டின் தேசந்தந்தை, உண்மையான ஒருமைப்பாட்டின் அடையாளம் காந்தியாரை அன்று அவர் சார்ந்த போட்டுத்தள்ளியது பத்தாது என இன்று ராமர் கோவிலை ஒற்றுமையின் அடையாளம் என முன்னிறுத்தி மற்றுமொரு முறை தன்பங்குக்கு போட்டுத்தள்ளியிருக்கிறார். முன்னதில் குண்டடி,தற்போது சொல்லடி. ஆனால், காந்தியாருக்கு சேதாரம் ஒன்று தான்.
ஒன்றுபட்டு கிடந்த இந்தியர்களை மதத்தை முன்னிலைப்படுத்தி கூறுபோட்டது தவிர ராம் ராஜ்ஜிய புதிய இந்தியாவின் சாதனை தான் என்ன? இல்லைத்தெரியாமல் தான் கேட்கிறேன்...புதிய இந்தியா பிறந்தது,ராம ராஜ்ஜியம் மலர்ந்தது,ஒருமைப்பாட்டின் அடையாளமாக ராமர் திகழ்கிறார் என ஓயாமல் கத்துகிறீர்களே... முன்னர் இருந்த இந்தியாவில் என்ன தான் பிரச்சனை? நீங்கள் தான் பிரச்சனையாக இருந்தீர்கள். வன்முறை,மதத்துவேசம் என எல்லா சில்வண்டி வேலைகளையும் செய்துவிட்டு தற்போது புதிய இந்தியா மலர்ந்தது,பழைய இந்தியா மல்லாந்தது என எத்தனை அக்கப்போர். ராம கோவில் நம்மை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது என்கின்றீர்? அது எப்படி என்றும் சொல்லிவிடலாமே? உங்களிடம் மாட்டிக்கொண்டு நாடே கார்ப்பொரேட்டிக்கு அடிமையாகிக்கிடப்பதை எந்தக்கணக்கில் வைப்பது ஜி. பாபர் மசூதி தாங்கள் அடிமைப்பட்டுக்கிடந்ததை ஓயாமல் நினைவூட்டுகிறது என அதை இடித்துத்தள்ளிவிட்டீர்? வெள்ளைக்காரனுக்கு ஷு பாலீஷ் போட்ட தங்கள் வீர பராக்கிரம முன்னோரின் அடிமை சேவக வரலாற்றை எதை இடித்து மாற்றப்போகிறீர்கள் ஜி. சீக்கிரம் சொன்னால் நாங்களும் தயாராவோம்...!!
பாரத் டாடிக்கு ஜே...!!
Comments
Post a Comment