குறுக்கு வழியில் கணக்கு...!!
சில எளிய முறை கணித வழிகளை இங்கு பார்க்கலாம். “ஒரு எண்ணை ஆறால் பெருக்க வேண்டும் என்றால் முதலில் அதை இரண்டால் வகுத்துக் கொள்ள வேண்டும்” உதாரணம் ; 500 ஐ 6 ஆல் பெருக்க வேண்டும் என்றால் முதலில் அதை இரண்டால் வகுத்துக் கொள்ள வேண்டும். 500/2=250 “ பிறகு வகுத்து வந்த எண்ணை 10 ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும் “ 25௦*10=2500 “ பெருக்கிய பின் கிடைத்த விடையை முதலில் எடுத்துக் கொண்ட ஆறால் பெருக்க வேண்டிய எண்ணோடு கூட்டினால் விடை கிடைத்துவிடும்” 2500+500=3000 ;(50 ௦ *6=3000) மேலும் சில உதாரணங்கள் ; # 568 ஐ ஆறால் பெருக்க வேண்டும் என எடுத்து கொள்வோம். 568/2=284 ...