ஏப்ரல் -23...
இந்நாள் என்ன விசேஷம் தெரியுமா? உலக புத்தக
தினம். இந்நாளை அப்படி கொண்டாடக் காரணம் ஷேக்ஸ்பியர். அந்தக் காலத்துல லத்தீன் தான்
ஆட்சி மொழியா இருந்திருக்கு.இங்கிலீஷ் பேசுறவங்க , எழுதுறவங்க
எல்லாரையும் மட்டமா treat பண்ணியிருக்காங்க. ஷேக்ஸ்பியர், மில்டனுக்கு
எல்லாம் ஸ்கூல்ல சீட் கிடைக்கலை. மில்டன கலகக்காரர்னு சொல்லுவானுங்க, ஏன்னா? ஸ்கூல் வாசல்ல
நின்னு ஸ்கூலுக்கு எதிரா நோட்டீஸ் கொடுத்து கலகம் பண்ணிக்கிட்டே இருப்பாராம். அதனால
பல தடவை ஜெயிலுக்கு போக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காம். அப்படி சிறையில் இருக்கும்
போதே நிறைய புத்தகங்கள் எழுதுவாராம்.ஸ்கூல் உள்ளயே நுழைய முடியாத மில்டனும், ஷேக்ஸ்பியரும்
தங்கள் புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு பாடமா வச்சதால, பள்ளிக்குள்
அடி எடுத்து வைத்தார்கள்.அந்த நாளைத் தான் (ஏப்ரல்-23) உலக புத்தக தினமாக கொண்டாடுகிறார்கள்.
நான் இன்னைக்கு subject
books ஐ விட , general books தான் நிறைய படிச்சுக்கிட்டு இருக்கேன்.
என்னோட staffs ஐ விட இறையன்பு, சுகி சிவம், தென்கட்சி சுவாமிநாதன் போன்றவர்களைப் பற்றி அதிகம் தெரியும், அதிகம் பிடிக்கும்.
இன்னும் சில விஷயம் சொல்லியே ஆகனும்.
எந்த லைப்ரரிக்கும் நிரந்தரமானவங்கனு
யாரும் இல்லை.ஆனால் லண்டன் நூலகத்தோட தூண்ணு
கார்ல் மார்க்ஸ சொல்லுவாங்க, ஆமா அவ்வளவு நேரம் சளைக்காமல் புக்ஸ படிப்பாராம்.
அதே மாதிரி ஐசக் நியூட்டன்
, Cambridge பல்கலைகழக லைப்ரரியே கதினு கடந்தவர் தான். மிகப்பெரிய தத்துவ மேதைனு உலகம்
சொல்லுது. ஆனால் அவரோ அமைதியா புக்ஸ படிங்க நீங்களும் மேதைனு சொல்லிட்டு போய்ட்டாரு.
சேகுவாராவ தெரியாதவங்க இருக்க முடியாது.! அவர் தன்னோட துப்பாக்கி
வைக்குற உரைல புக்ஸ வச்சுக்கிட்டு போவாராம். எந்த அளவுக்கு புக்ஸ நேசிச்சிருக்கார்
பாருங்க..!
நெல்சன் மண்டேலா தன்னோட வாழ்நாள்ல பாதிய ஜெயில்லயே
வாழ்ந்தவர்.அவர்கிட்ட மத்தவங்க எப்படி சார் ஜெயில்ல இவ்வளவு நாள் வாழ்ந்தீங்கனு கேட்க
அதுக்கு அவர் ரொம்ப அழகா பதில் சொன்னாரு ”வாசிச்சேன், வாழ்ந்தேன்னு”
என்ன ஒரு அழகான பதில்.
சார்லி சாப்ளின் சம்பளம் வாங்குனா மொதல்ல புத்தகம் வாங்க தான் போவாராம்.
வாழ்க்கைய ரசிக்க மொதல்ல ஒரு புத்தகத்தை ரசிச்சு படிக்குற பொறுமை வேனும்னு சொன்னவர்
அவர்.
அம்பேத்கர் லண்டன் போனப்ப
அங்க இருந்த ஆபிசர்ஸ் எங்க சார் ரூம் புக் பண்ணட்டும்னு கேட்க , லைப்ரரி
பக்கத்துலனு பதில் சொல்லியிருக்கார்.
ஒரு அராபியப் பொன்மொழி எனக்கு
ரொம்ப புடிச்சது.
“ புக்ஸை இரவல் கொடுப்பவனும் முட்டாள்,
இரவல் வாங்கிய புத்தகத்தை திருப்பிக் கொடுப்பவனும் முட்டாள்”
கடைசியா...
நட்பின் பகிர்தல்
அன்பின் வெளிப்பாடா?
நண்பனுக்கு கொடு புத்தகத்தை..!!!
குறிப்பு: என் கல்லூரி காலத்தில் எழுதிய கட்டுரை.


Comments
Post a Comment