இதுவரை இல்லாத ஆன்ட்ரியா...!
தேன்குரல் என்று
கூறுவதில் எவ்வித சங்கடமும் இல்லை. நான் அஞ்சலி பாப்பாவின் குரலை சொல்லவில்லை .
ஆன்ட்டி ஆன்ட்ரியாவின் குரலைத்தான் சொல்கிறேன்.இங்கே அன்ட்டி என்று கூறியமைக்கு
மன்னிக்கவும்.அவர் என்ன தான் கவர்ச்சியின் உச்சம் காட்டி நடித்தாலும், எனக்கு
என்னவோ அது ஆன்ட்ரியாவுக்கு வெட்டி வேலை என்றே சொல்லத் தோன்றுகிறது.அவரது உடலழகை
விட குரலழகை பெரிது ரசிப்பவன், நேசிப்பவன் நான்..எத்தனை முறை கேட்டாலும் மறுபடி மறுபடி போட்டு போட்டு கேட்கத்தூண்டும்
காந்தக்குரல் அவருடையது.அவர் நடிப்பை ஓரங்கட்டிவிட்டு முழுநேரம்
பாட்டுபாடுவதில் கவனம் செலுத்தலாம் என்பது என் விருப்பம்.எத்தனை முறை கேட்டிருப்பேன் அந்தப்பாடலை . இன்னும் எவ்வளவு
காலத்திற்கு எத்தனை முறை கேட்பேன் எனத் தெரியவில்லை. அலுக்காமல் ரிப்பீட் மோடில்
கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
கோவா படத்தில் வரும் “ இதுவரை இல்லாத ...”
அவர் பாடியதில் மாஸ் ஹிட் என்று அடித்துக் கூறலாம். மிக அற்புதமாக
பாடியிருப்பார்.கங்கை அமரன் தான் பாடலை எழுதியிருக்கிறார். சன் சிங்கரில் ஜட்ஜாக
போட்டு கங்கை அமரனை ஒரு காமெடிபீஸாக உறுமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல கலைஞன்
அவர். ஆன்ட்ரியாவை விட வேறு யாரவது அந்தப்பாடலை பாடியிருந்தால் இத்தனை சிறப்பாக
வந்திருக்குமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் அவரிடம் சிலகுறைகள் இருக்கத்தான்
செய்கிறது. ’ல’, ‘ள’,
‘ழ” வித்தியாசம் இல்லாமலே பாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு
இந்த வித்தியாசம் புரியாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.சிட்டி கேர்ள் ஆக வளர்ந்து
விட்ட படியால் , தமிழை ‘தமில்’என்று தான் படித்திருப்பார்.
இந்தப் பிழைகளையும் தாண்டி அவர் குரல்
என்னுள் ஏதோ செய்கிறது. அவருக்கு ஆங்கில வார்த்தைகள் அதிகம் கொண்ட பாடல்கள்
சிறப்பாக வருவதை கவனிக்கலாம்.’ அந்நியன்’ திரைப்படத்தில் வரும் கண்ணும் கண்ணும்
நோக்கியா, யாரடி நீ மோகினியில் வரும்’
ஓ பேபி..’, நண்பேன்டா திரைப்படத்தில் வரும் ‘ நீ சன்னோ நியூ மூனோ..” போன்ற பாடல்கள் ஆங்கில வார்த்தைக் கலப்பு கொண்டவை, ஆன்ட்ரியாவால் மிக அழகாக பாடப்பட்டவை.அவர் இது போன்ற பாடல்களையே
தேர்ந்தெடுத்துப்பாடலாம்.
மேலும் சிலப் பாடல்கள் இருக்கின்றன.
துப்பாக்கியில் ‘கூகுள்கூகுள்..’,முப்பொழுதும் உன் கற்பனையில் ‘ ஒரு முறை ஒரு முறை..’, ஆயிரத்தில் ஒருவனில் ‘உன் மேல ஆசை தான்..’, ஆதவனில் ‘யேனோ யேனோ பனித்துளி...’, போன்ற படல்களை அவரைத் தவிர
வேறு யாரோனும் பாடியிருந்தால் என்னால் ஒதுக்கப்பட்டிருக்கலாம். அவரிடம் நான் நிறைய
எதிர்பார்க்கிறேன் பாடலில் மட்டும். சமீபத்தில் அவருடைய பேட்டி ஒன்றைப்
படித்தேன். ‘இனி
பார்ட்டிகளில் கலந்து கொள்வதில்லை . நீங்கள் புது ஆன்ட்ரியாவை, இதுவரை இல்லாத ஆன்ட்ரியாவை பார்க்கலாம்’ எனக்கூறியிருந்தார்.
நானும் அந்த புது ஆன்ட்ரியாவை இதுவரை இல்லாத ஆன்ட்ரியாவை காண கடலளவு காதலுடன்
காத்திருக்கிறேன்.

Comments
Post a Comment