பாகுபலி- செவிட்டு காதுகள்,குருட்டு கண்கள், ஊமை வாய்கள்....
10-07-2015 உலகமெங்கும் பிரம்மாண்டமாய் ரிலீஸான
‘ பாகுபலி’, ‘நான் ஈ’ ராஜமௌலியின் பிரம்மாண்டமான
படைப்பு. காலை, மாலை , மதிய ஷோக்களுக்கு
செல்ல இயலாமல் , இரவு காட்சிக்கு சென்றிருந்தேன்.தெலுங்கில் தான்
பார்க்க முடிந்தது. தமிழில் ஒரு முறை கட்டாயம் பார்க்க வேண்டும்.எல்லோரும் ஆஹா..! ஓஹோ..!
எனப்புகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் என்னால் மட்டும் முழுமையாக மனம் ஒன்றி பாராட்ட
முடியவில்லை.
காரணம் நிறைய இருக்கிறது. பெரும்பாலும் தெலுங்கு
ஆக்சன் படங்களை அடியேன் விரும்புவதே இல்லை . சற்றும் லாஜிக்கே இல்லாத சண்டைக்காட்சிகள்.
நம்பகத்தன்மை அறவே இல்லாத நான் ஸ்டாப் சண்டைக்காட்சிகள்
நிறைந்த திரைக்காவியங்கள் அவை. என்னைப் போன்ற நிகழ்கால வாழ்க்கையை அச்சு பிசறாமல் பிரதிபளிக்கும் கொரியன் பட விரும்பிகளுக்கு
இவை பிடிக்காமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.’ பாகுபலி’யும் அதே தெலுங்கு கரம் மசாலா.குரங்கு கூட இப்படி
தாவாது, ஆனால் பிரபாஸ் செய்கிறார். தமன்னாவைப்பார்த்து மலை உச்சி
ஏறும் காட்சியைப் பார்த்து தியேட்டரே பிரம்மிக்க , எனக்கு மட்டும்
அக்காட்சி கிச்சிகிச்சி மூட்டியது குலுங்கி, குலுங்கி சிரித்தேன்.தமன்னாவை
எதற்க்காக ஒரு வீரராக காட்டினார் எனத் தெரியவில்லை அந்த முகத்துக்கு ரியாக்சன் என்பது
சுட்டு போட்டாலும் வராது,வரவும் போவதில்லை . வெறும் கிளாமருக்கு
மட்டும் பயன்படுத்தியிருக்கலாம்.
அண்ணன் , தம்பி சண்டை, அரியணைப்
பிரச்சினை, தாயைக் கொடுமைப்படுத்தியவனைப் பழிவாங்கல், தந்தையை கொன்றவனைப்பழிவாங்கல், சகுனி மாமா எனப் பழைய, ரொம்ப பழைய டெம்ப்ளெட், மேலே கொஞ்சம் வரலாற்றுச்சாயம்
பூசி கலந்துகட்டி அடித்து விட்டிருக்கிறார்.சாதாரணக் கதை.போதாக்கொறைக்கு ஒரு குத்துப்பாட்டு
வேறு, தேவையா அது? இதற்கெல்லாம் மேல என்னைக்
கொதித்தெழ வைத்த விஷயம் , 2010 பொங்கல் அன்று செல்வராகவன் இயக்கத்தில்
‘ஆயிரத்தில்ஒருவன்’ வெளியானது.அப்பொழுது அதைக்குறை கூறியவர்கள் .’ பாகுபலி’யைக் கொண்டாடுவது வெட்கக்கேடு.வெறும் 32 கோடி செலவில் எடுக்கப்பட்ட’ ஆயிரத்தில் ஒருவன்’ அருகில், 250
கோடி செலவு செய்தும் உங்கள் பாகுபலி வரவில்லை .
சொல்லப்போனால் உங்கள் பாகுபலியில் எந்த இடத்திலாவது
யோசித்திருக்கிறீர்களா? இல்லை. இத்துப்போன தெலுங்கு டெம்ப்ளேட்டில் கொஞ்சம் வரலாற்று மசாலாவும் , பிரம்மாண்ட மாளிகையையும் போட்டு மேக்கப் செய்திருக்கிறீர்கள்.’ அயிரத்தி ஒருவன்’ கதையும், கதைக்களமும்
வித்தியாசம் எனக் கூறிக் கொள்வதில் அடியேனுக்கு லிட்டில் பிட் ஆப் பெருமை.செல்வராகவன்
கதைக்காக நிறைய யோசித்திருக்கிறார், பட் ராஜமௌலி பிரம்மாண்டத்திற்கு
என்ன செய்யலாம் என யோசித்திருக்கிறார்.’ஆயிரத்தில் ஒருவனில்’ நீங்கள் லாஜிக் குறை என சொல்லும் இடங்களில் எல்லாம், என்னால் சிறுஅளவேனும் விளக்கம் கொடுக்க இயலும்.
250 கோடி ரூபாய் எதற்கு செலவு செய்தார்கள் , டாப் வீவில் செட்டைக்காண்பிக்கும்
பொழுது முழுக்க கிராபிக்ஸ் ஒர்க் ஆக அல்லவா தெரிகிறது.இந்த கதையை செல்வராகவன் செய்திருந்தால்
100 கோடியில் முடித்திருப்பார்.சில முக்கிய வேறுபாடுகள்
- ஆ.ஒ போதுமான அளவு விளம்பரப் படுத்தப்படவில்லை , ‘ பாகுபலி’ விளம்பரத்தின் உச்ச
- ஆ.ஒ 30 கோடி பட்ஜெட் , பா.பலி 250 கோடி பட்ஜெட்
- ஆ.ஒ , ஆயிரத்தில் ஒரு படம் ,’ பா.பலி’ சாதாரணக் கதை , வரலாற்றுப்பின்ணணி கொண்டு படமாக்கியதால் பிரம்மாண்டம்.
- ஆ.ஒ (30 கோடிக்கு போதுமானது) போர்காட்சி கச்சிதமான ஒன்று, ‘பாகுபலி’ ஹாலிவுட்டின் எச்சம்.
மொத்தத்தில்
உங்கள் பாகுபலி பிடிக்கவில்லை. எங்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் போதும். உங்கள் குருட்டு
கண்களுக்கு , செவிட்டு காதுகளுக்கு. ஊமை வாய்களுக்கு “ பாகுபலி” போதும். “ஆயிரத்தில் ஒருவன்”
போன்ற வித்தியாச முயற்சிகள் தேவையற்றது.


Comments
Post a Comment