ஹம்பியும் அந்நியன் அம்பியாகிய நானும்....!




      இந்த நியூ இயர் ரிசல்யூஷன்ல ஒன்னு வாரா வாரம் எங்கயாச்சும் விதியேனு  சுத்தறது. கொஞ்ச காலம் அதாவது, கிட்டத்தட்ட இரண்டு வாரம் ஒழுங்காக சென்றிருப்பேன்.அதுக்கப்புறம் நிதிப்பிரச்சினை, பிரண்ட்ஸோட பிரச்சனை , மாசத்துக்கு ஒரு தடவையா ப்ரோகிராம மாத்துனேன். அப்புறம் கர்நாடகா வந்ததும் சுத்தமா ஊர் சுத்துறது நின்னு போச்சு. ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? .. திரும்பவும் எனக்குள்ள இருந்த ஊர் சுற்றும் ஊரிலில்லா முனிவர்  படக்குன்னு முழிச்சுக்கிட்டார். அதுக்கேத்த மாதிரி கம்பெனிலையும் வொர்க் ஆர்டர் கொடுக்க லேட்டாக , போடுடா பிளான்னு, எனக்குள்ளயே தட்டு தடுமாறி , முட்டி மோதி , பணம், டிராவலிங் டைம் எல்லாத்தையும் யோசிச்சு ரெண்டு ஆப்ஷன கண்ணு முன்னாடி வைச்சேன். 
1.  ஹம்பி 
2. துங்கபத்திரா
ரெண்டுமே ஏறக்குறைய ஒரே டிஸ்டன்ஸ் , துங்கபத்திரா டேம்க்கு (dam)  நைட் இல்லாட்டி மாலை வேளை தான் பெஸ்டுனு ஒரு அதிமேதாவி சொல்ல , சரி விட்றா வண்டிய ஹம்பிக்குனு கெளம்புனோம்.( அண்ணன் சிம்சனும் உடன் வந்தார்)
               முப்பது கி.மீட்டருக்கு 33 ரூபாய் அநியாயமா கொடுத்து ஹம்பிக்கு போய் எறங்குனா, சார் சார் சார்னு ஒரு கூட்டம் . ஹம்பிய நடந்தே சுத்திப்பார்க்க முடியாதாம் ,மொத்தம் 17 இடம் இருக்குங்க சார் , 25 கி.மீ சுத்தனும் சார் . நம்ம கிட்ட ஆட்டோ இருக்கு சார் , வாங்க போலாம்னு கூப்பிட,
பைசா எவ்வளவு?”
“ 800 ரூபாய் சார் ,உங்களுக்காக 700 சார் “
பேரம் பேசுறது நமக்கு தான் கை வந்த கலையாச்சே .
” 400 ரூபாய் தான், புல் டே , சுத்திப்பாக்குற வரையும் வெயிட் பண்ணனும் , எல்லா இடத்தப் பத்தியும் தெளிவா சொல்லனும் ஓகேவா-னு டீல் பேச ஆரம்பிச்சு , அப்படி இப்படினு 500 ரூபா தான்னு முடிச்சுட்டு கிளம்பியாச்சு.”
      இனி ஹம்பிய கொஞ்சம் சீரியஸா கவனிக்கனும் . எங்க எப்படியோ , நம்ம இந்துஸ்தானத்துக்கு முகலாயப் படையெடுப்பு  பெரும் சேதம் விளைவிக்க கூடியதா தான் இருந்திருக்கு.ஆடை, ஆபரணம் , கலாச்சாரம், நினைவுச்சின்னங்கள் , வியாபாரம், ஆட்சிமுறை என அனைத்திலும் மாற்ற முடிந்ததை மாற்றியும், அழிக்க முடிந்ததை அழித்தும் சென்றுவிட்டனர்.
      அதிலும் இந்து தலங்களின் மீது அவர்கள் நடத்திய தாக்குதல்கள் யாராலும் ஜீரணிக்க முடியாதவை .அனைத்து இந்துத் தலங்களையும் அழித்து பின்னர் மக்கள் அனைவரையும் இஸ்லாமுக்கு மாற்ற வேண்டும் என்பது பெரும்பாலான மன்னர்களின் இலக்காக இருந்திருக்க வேண்டும். ஒரே ஆறுதல் சிவத்தலங்களின் மீது மட்டும் தாக்குதல் நடத்தாமல் விட்டு வைத்திருக்கிறார்கள் . அது பற்றி தனியே எழுதுகிறேன்.
      ஹம்பிக்கு வருவோம் . துங்கபத்திரா ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிற்றூர். விஜய நகரப் பேரரசின் தலநகரான விஜயநகரத்துக்கு அருகில் உள்ளது.விஜய நகர இடிபாடுகளை , மிச்சமீதி இருக்கும் அழிபாடுகளை ஹம்பி மோனுமன்ட்ஸ்”( hampi monuments) என வகைப்படுத்தி பாதுகாத்து வருகிறார்கள்.ஹம்பியின் புகழுக்கு மற்றுமொரு காரணம் இங்குள்ள விருபாட்சகர் கோவில்’.
      ஹம்பி என்பது ஆங்கில வார்த்தை , ஹம்பே என்னும் கன்னட வார்த்தையிலுந்து மருவியதாகவும் , பம்பா என்று முன்பு அழைக்கபட்ட துங்கபத்திரை ஆற்றின் பெயரிலிருந்து உருவாகியிருக்கலாம் எனவும் கூறுகிறார்கள்.
      விஜய நகர அரசர்களின் குலதெய்வம் இந்த விருபாட்சர் என்பதனால் அதன் பொருட்டு விருபாட்சபுரம்’.என்றும் அழைக்கப்படுகிறது. விஜய நகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டிருப்பினும் , விக்கிப்பீடியா சாளுக்கியர்களின் காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது, முன்னுக்கு பின் முரணான தகவல்களால் மேற்கொண்டு இதைப்பற்றி இங்கே விவரிக்கப்போவதில்லை.
*ஹம்பியில் முதலாம் நூற்றாண்டிலிருந்து குடியேற்றங்கள் தொடங்கியுள்ளன, ஆனால் , ஏழாம் நூற்றாண்டில் தான் விருபாட்சர் கோவில் கட்டப்பட்டுள்ளது.”
“இராமாயணத்தில் வரும் கிஷ்கிந்தையுடன் ஹம்பியில் உள்ள பல இடங்கள் அடையாளம் காணப்படுகின்றன”
.”அனுமன் பிறந்த அஞ்சனாத்திரி குன்று இங்கு தான் உள்ளது.. அதில் 1060 படிகள் ஏறினால் அனுமனுக்கும் அவரது தாயார் அஞ்சனாதேவிக்கும் கோவில் உள்ளது . அனுமனின் தந்தை வாயுபகவான் எனக் குறிப்புள்ளது.
“ விஜய நகர ஆட்சிக்காலத்தில் கோவில் சொத்துக்களை கொள்ளை அடிப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது”

சரி டைட்டிலுக்கு வருவோம் , ஹம்பிக்கு நான் அந்நியன் , ஹம்பியில் வாழ்ந்த வீரர்களோடு கம்பேர் பண்ணினால் நான் ஒரு சாதாரண அம்பி , அதை வெளிக்கொணரவே இந்த தலைப்பு.

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!