விஷி....


      நாமெல்லாம் வெட்கப்பட வேண்டும், கண்டிப்பாக வெட்கி தலைகுனிய வேண்டும்.யாருக்கும் கிடைக்காத சிறப்பல்லவா இது.!! அதிலும் குறிப்பாக ஒரு தமிழனுக்கு கிடைத்திருப்பதை திருவிழாவாக அல்லவா நாம் கொண்டாடி இருக்க வேண்டும். பாவப்பட்ட மனிதர். இந்நேரம் ஒரு கிரிக்கெட் வீரருக்கு இந்த சிறப்பு கிட்டியிருந்தால் இந்தியாவே கொண்டாடி இருக்கும். நாம் தான் கிரிக்கெட் தவிர வேறு எந்த விளையாட்டையும், விளையாட்டு வீரரையும் அறியாதவர்கள் ஆயிற்றே..!!இந்தப் பாவப்பட்ட தேசத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் பெயரும், புகழும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இனிமேலும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே?????
      நம் தேசிய விளையாட்டையே தேசம் மறந்து கிடக்கும் இவ்வேளையில் நான் இதற்காக இப்படி புலம்புவது ஞாயமில்லை தான், இருந்தாலும் புலம்பாமல் எப்படி இருப்பேன். யாரும் இதுவரை அடைந்திராத , குறிப்பாக உங்கள் கிரிக்கெட் வீரர்கள் அடையாத பெருமையை அல்லவா பெற்றிருக்கிறார்.
      இந்த பத்திரிக்கை உலகம் என்ன செய்து கொண்டிருந்தது என்று தெரியவில்லை. ஒரு பெட்டிச்செய்தியைக்கூட காணவில்லை??? சச்சினின் பாரதரத்னா பிரச்சினை என்றால் தலைப்புச் செய்தியாக்கியிருப்பார்கள்.தோனி ரிட்டயர்மென்ட் என்றால் பெரிய படம் போட்டு அழுதிருப்பார்கள். கோலி – அனுஷ்கா காதல் விவகாரமா???, கலர் படம் போட்டு கலாய்த்திருப்பார்கள். இவரோ யாரும் சீண்டாத விளையாட்டுத்துறையை சேர்ந்தவரல்லவா?. உங்கள் கிரிக்கெட் வீரர்கள் பெயரை தெருவுக்கு , பிறந்த குழந்தைகளுக்கு, பள்ளி,கல்லூரிகளுக்கு வேண்டுமானால் வைக்கலாம். ஆனால் இவரது பெயரை ஒரு கிரகத்துக்கு வைத்திருக்கிறார்கள். எப்பேர்பட்ட சிறப்பு.!!!
அந்த கிரகமானது செவ்வாய் மற்றும் வியாழனுக்கிடையே நிலை பெற்றிருக்கிறது.அந்த கிரகத்தை கண்டறிந்தவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் ”கென்ஜோ சுசூகி”. அந்த கிரகத்துக்கு இவர் பெயரை சூட்ட பரிந்துரைத்தவர் அமெரிக்க மைனர் பிளான்ட் சென்டரின்   உறுப்பினரான மைக்கெல் ரூடென்கோ. அந்த கிரகத்தின் பெயர் “விஷி ஆனந்த்-4538” இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர்கள் அந்த விளையாட்டு வீரர் யாரென்று. அவரே தான்.

      “செஸ்” எனும் சதுரங்க விளையாட்டின் சக்ரவர்த்தி, மயிலாடுதுறைக்காரர், விஸ்வநாதன் ஆனந்த்”.ஏன் அந்த கிரகத்திற்கு ஆனந்த் பெயரை பரிந்துரைத்தீர்கள் என்று கேட்டதற்கு ரூடென்கோ சொன்ன பதில்    “ ஆனந்துக்கு விண்வெளி ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வம் உண்டு .எனவே தான் அவரது பெயரை சூட்டி இருக்கிறோம்”....
      கிரிக்கெட் தாண்டி வேறொரு விளையாட்டு உலகமும் இருக்கிறது கிரிக்கெட் அல்லாது சாதனை புரிந்த பிற துறை வீரர்கள் நம்மிடம் நிறையவே  இருக்கிறார்கள். அவர்களில் இவரும் ஒருவர், திறமைகளின் கூடாரம், விளம்பர புகழ் அறியா எளிய மனிதர். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, அவரது மாறாத புன்னகையையும் சேர்த்து.

Comments

  1. Rudenko said, “My two passions in life are astronomy and chess. I thought it might be appropriate to name a minor planet in honour of a chess grandmaster. My thoughts at once turned to Viswanathan Anand who, in addition to being the 15th world chess champion, is also an astronomy buff.”

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!