அடிச்சித்தான் கேட்கணும்..!!
ஒரு சின்ன வேலையா அலுவலகத்தான்ஸ் நேற்று இதுவரைக்கும் காலடிபடாத பாலைவனத்தோட ஒரு கடற்கரை நகருக்கு அனுப்பிவச்சானுங்க. பெயர் குறிப்பிட விரும்பவில்லை, சொன்னாலும் யாருக்கும் தெரியப்போறது இல்லை. விட்டுத்தள்ளுங்க, இது ஒரு பாலைவன ராம்நாடு. பெரும்பாலும் பாலைவனத்துல இருக்குற ஒரே நல்ல விஷயம் ஐந்து நட்சத்திரக் குறியீடு ஹோட்டல் அளவு இல்லாட்டியும் இரண்டு நட்சத்திரக் குறி ஹோட்டல் அளவுக்காவது குவாலிட்டியா ரூமும், சோறும் கிடைக்கிறது தான். என்னடா இம்புட்டு குவாலிட்டியா தரானுங்களே இவனுங்களுக்குக் கட்டுபடியாகுமான்னு அங்க இங்க உருட்டிப்பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, கம்பெனி நமக்கு பத்து ரூபா செலவு பண்ணா, நம்மளை வச்சி நூறு ரூபாய்க்குக் குறையாம சம்பாரிப்பானுங்கன்றது. சரி சொந்தமா முதல் போட்டு கம்பெனி நடத்துறானுங்க பிழைத்துப்போகட்டும்ன்னு கண்டுக்காம இருக்கலாம் தான். ஆனால், இதுலயும் சில பேராசைப் பெருச்சாளிங்க இருக்கானுங்க. மருந்துக்கும் தொழிலாளிங்களைக் கண்டுக்காம அவசரகாலத்துல அரசாங்கம் ரெடி பண்ற கேம்ப் கணக்கா ரூமும், எங்கேயாவது வெள்ளம் வந்தா ஊறுகாய் பாக்கெட்டை உதவியா வழங்குற திடீர் வள்ளல் கணக்க...