கங்கை கொண்ட சோழன்.... சோழர்களின் வீர வரலாறு...
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது பாலக்குமாரனின் ஒரு ஆன்மீக நாவலை படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.அடியேனுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருப்பினும் , தலங்களுக்கு செல்லும் விருப்பம் அதிகம் உடையவனாக இருப்பினும் , ஆன்மீகத்தை எழுத்தின் மூலம் படிக்கும் அளவுக்கு பொறுமை துளி கூட கிடையாது. அந்த நாவலை பத்து பக்கம் படிப்பதற்க்குள் நூறு முறை கண்கள் சொக்கியது. அன்று முதல் பால குமாரன் அவர்கள் ஆன்மீகம் பற்றி மட்டுமே எழுதும் பெரியவர் என அவரையும் அவர் புத்தகங்களையும் அரவே ஒதுக்கிவிட்டேன். **************************** உதயா மாமா 40 வயதைக் நெருங்கிய சீனியராக இருப்பினும் டிரண்டில் இருப்பவர். ஜாலியாக பழகும் மனிதர். அவர் வரலாற்றின் மீது அவ்வளவு பிரியம் வைத்திருக்கிறார் என்பதை அவர் கங்கை கொண்ட சோழன் புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் போடு என்று கூறும் வரை அடியேன் அறியவில்லை.....மாமா அவர் புக்ஸ்லாம் போர் , படிச்சா தூக்கம் தான் வரும் , அதைப்போய் ஏன் வாங்குறீங்க ? என கே...