வழக்கம் போல் தான் கேண்டீன் சென்றேன் . ஆனால் சிறிது தயக்கம் , கையில் சில்லறை இல்லை , வழக்கமாக சில்லறை இல்லையென்றால் கேண்டீனில் சாப்பாடு கிடையாது கொடுத்த பிளேட்டை சில்லறை கொடுத்துட்டு வாங்கிக்கோ என பிடுங்கி வைத்துக்கொள்வார்கள். கஸ்டமர் மீது சிறிது கூட அக்கறை கிடையாது. தண்ணீர் கூட டேபிளில் வைக்கமாட்டார்கள். கேட்டால் ? செல்ப் சர்வீஸ் என்பார்கள். அப்பேற்பட்ட கேண்டீனில் உண்ணக்காரணம் , 30 ரூபாய்க்கு அன்லிமிட்டட் மீல்ஸ் என்பது மட்டுமே , உடன் இரண்டு சப்பாத்தி , இரண்டு கொழம்பு , இரண்டு பொறியல் , பாயாசம் , வத்தல்....... பிறகென்ன சாப்பிடுவதற்கு...வீண் பிடிவாதத்தையெல்லாம் மூட்டைக்கட்டிவிட்டு சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டவேண்டியது தான்.. கையில் நூறு ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு செல்கிறோம் , என்ன செய்ய போறானுங்கனு தெரியலையேனு கவலையோட போனேன்.பணத்தை வாங்கிய கேஷியர் , சேஞ்ச் நகி பையா என விளிக்க , அடியேன் சாப் பிளிஸ் என விளிக்க...... ஸ்பெஷல் மீல்ஸ் வாங்குனா சேஞ்ச் தருவதாக சொன்னார் . அது என்னயா ஸ்பெஷல் மீல்ஸ்... ஹாப்மீல்ஸ் ,...