ஈழத்தை ஆண்ட மயன்
ஈழத்தை மயன் ஆண்டதை, A historical, Political and Statistical Account of Ceylon (Charles Pridham), விஸ்வ புராணம், மாந்தைப் பள்ளு, மாந்தை மாண்மியம் போன்ற நூல்களும், எடுத்துச் சொல்கின்றன.
இவனின் வழித் தோன்றலான நல்லியக் கோடன், இலங்கையை ஆண்டதை,
"நன்மா இலங்கை மன்னருள்ளும்
மறு இன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்
உறு புலித் துப்பின் ஓவியர் பெருமகன்" (சிறுபாணாற்றுப் படை, 120 - 123)
எனச், சங்கப் புலவரான நல்லூர் நத்தத்தனார் புகழ்கின்றார்.
மயனே, தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும், தந்தை ஆவான். அவன், எக் கலைகளிலும் வல்லவன் என்பதைப், பழந்தமிழ்க் கலை நூல்கள் சொல்கின்றன.
"மயன் விதித்துக் கொடுத்த
மரபின் இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்து
ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்"
(இந்திர விழவூரெடுத்த காதை: 108 - 109)
இந்திர விழாவில் அமைக்கப் பட்டிருந்த தோரண வாயில்களும், மண்டபங்களும், மயனால் இயற்றப்பட்ட விதி முறைப்படி, மரபு வழுவாது கட்டப் பட்டதால், அறிஞர்களால் புகழ்ந்து பேசப்பட்டதென, இளங்கோ அடிகளும், சிலப்பதிகாரத்தில், மயனின் பெருமை பேசுகின்றார்
Comments
Post a Comment