மயன் குறியீடு....



போன வருடம் என நினைக்கிறேன்.. உலகம் அழியப்போகிறது.. மாயன் காலண்டரில் உள்ள நாட்கள் முடியப்போகிறது என ஒரே அலப்பறையாக இருந்தது. மயன் காலண்டரும் முடிந்தது , உலகம் அழியும் என்ற அவநம்பிக்கை வாதமும் முடிவுக்கு வந்தது. இந்த மயன் குறியீடுக்கும் , மாயன் கும்பலுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மயன் குறியீடு நம் தமிழர் பாரம்பரியத்தோடு தொடர்புடையது..மாயன் காலண்டர் பத்தி தேடும் போது சில தகவல்கள் கிட்டியது.. அதாவது நாம் இப்போது வீடு கட்டுவதற்கு முன் பிளான் போடுகிறோமே அதைப்போல் அந்தக் காலத்தில் பயன்படுத்தியதே மயன் குறியீடு. நம் ஆதி தச்சரின் பெயர் மயன் . அவர் பயன்படுத்திய குறியீடே பிற்பாடு அனைவராலும் மயன் குறியீடு எனப் பயன்படுத்தப்பட்டது.
      கோவில் மற்றும் அரண்மனை போன்றவை கட்டப்படும் பொழுது மயன் குறியீடு முதன் முதலில் அமைக்கப்பெற்று பின்னரே கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் கட்டிடம் அமைக்கப்படும் திசை, கோணம் முதலியவை துல்லியமாக கணக்கிடப்பட்டிருக்கும். காற்றோட்டம் துல்லியமாக கணிக்கப்பட்டிருக்கும்..இவை மட்டுமே தற்பொழுது என் நினைவில் இருக்கிறது.
      மயன் குறியீடு பற்றி தி ஹிந்துவில் ஒரு கட்டுரை வந்துள்ளது , அதன் பிறகே நம் மயன் குறியீடு பற்றி நீண்ட நாட்களுக்கு பிறகு  நெட்டில் துளாவினேன், எந்த உருப்படியான தகவலும் அகப்படவில்லை... மயன் குறியீடு பற்றி தெரிந்தவர்கள் அத்தகவலை g.saravana1993@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்...
      உங்கள் பார்வைக்கு தி ஹிந்துவில் வந்த கட்டுரை..

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!