ஸ்பெஷல் மீல்ஸ்...



      வழக்கம் போல் தான் கேண்டீன் சென்றேன் . ஆனால் சிறிது தயக்கம் , கையில் சில்லறை இல்லை, வழக்கமாக சில்லறை இல்லையென்றால் கேண்டீனில் சாப்பாடு கிடையாது கொடுத்த பிளேட்டை சில்லறை கொடுத்துட்டு வாங்கிக்கோ என பிடுங்கி வைத்துக்கொள்வார்கள். கஸ்டமர் மீது சிறிது கூட அக்கறை கிடையாது. தண்ணீர் கூட டேபிளில் வைக்கமாட்டார்கள். கேட்டால்? செல்ப் சர்வீஸ் என்பார்கள். அப்பேற்பட்ட கேண்டீனில் உண்ணக்காரணம், 30 ரூபாய்க்கு அன்லிமிட்டட் மீல்ஸ் என்பது மட்டுமே , உடன் இரண்டு சப்பாத்தி, இரண்டு கொழம்பு, இரண்டு பொறியல், பாயாசம், வத்தல்....... பிறகென்ன சாப்பிடுவதற்கு...வீண் பிடிவாதத்தையெல்லாம் மூட்டைக்கட்டிவிட்டு சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டவேண்டியது தான்..
      கையில் நூறு ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு செல்கிறோம், என்ன செய்ய போறானுங்கனு தெரியலையேனு கவலையோட போனேன்.பணத்தை வாங்கிய கேஷியர், சேஞ்ச் நகி பையா என விளிக்க, அடியேன் சாப் பிளிஸ் என விளிக்க...... ஸ்பெஷல் மீல்ஸ் வாங்குனா சேஞ்ச் தருவதாக சொன்னார். அது என்னயா ஸ்பெஷல் மீல்ஸ்... ஹாப்மீல்ஸ், புல் மீல்ஸ் , பார்சல் மீல்ஸ் வரிசையில இது என்னயா புதுசா இருக்கே கொடு பார்க்கலாம் என சொல்லிவிட்டேன்.
      அவர் கொடுப்பதற்க்குள் அது என்னவா இருக்கும், ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி-னா பாசுமதில செஞ்சுருப்பனுங்க .. ஓ அப்படி தான் இங்கேயும் தருவானுங்க போல என எண்ணிக்கொண்டிருந்த என் எண்ணத்தில் தாரை காய்ச்சி ஊற்றினார்கள்.சாதாரண சாதத்தில் கொஞ்சம் கறிவேப்பிலை, கொஞ்சம் கிராம்பு போட்டு மசாலா ரைசை, வொய்ட் ரைசுக்கு பதிலாக தந்தார்கள். அடப் பாவிகளா வச்சு செஞ்சுட்டீங்களே டா...

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!