நடராசனும்,அறிவியலும்,மயனும்

எழில்மிகு நடராஜ வடிவை, ஒரு தமிழனான மயன் வடிவமைத்தான் என்றால், அவனின் காலத்திற்கு முன், தமிழர் கலைகளும், கலாச்சாரமும், எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்திருக்க வேண்டும்? அதுவும், ஈழத்தில்! இது, ஆராயப்பட வேண்டிய விடயம்.

மயன், எவ்வாறு இந்த நடராஜ உருவை உருவாக்கினான் என்பதை, இன்றைய விஞ்ஞானக் கருத்துக்களுடன் எமக்குக் கூறுகின்றான்.

கதிரவனின் ஒளிக் கதிரிலுள்ள துகள், ஒரு கனபரிமாண வடிவாக இருக்கின்றது. அதனுள் மிளிர்வது, ஒளியே. இவ்வொளி
கட்டிய(து), சிற்சபை அல்லது சிற்றம்பலம் என்றும், அதனுள்ளே இருக்கும் ஒளியை, மூலம் (மூலப் பொருள்) என்றும், மயன் சொல்கின்றான்.
மூலப் பொருளினுள் இருக்கும் ஒளியானது, ஒடுங்கி விரியும் தன்மையானது. இந்த மூலப் பொருள், இடமிருந்து வலமாகச் சுழல்கின்றது என்று கூறி, அச் சுழற்சியை, அவன், காலம் என்ற சொல்லால் அழைக்கின்றான். இக் கால ஓட்டமானது, ஒரே சீராக நடைபெறுகின்றது என்றும், அந்தச் சீரான ஓட்டத்தைச், சீலம் எனவும், இயம்புகின்றான். அந்தச் சீரான துகள்களின் சேர்க்கையால், பல உருவங்கள், வடிவங்கள், பொருட்கள், தோன்றுகின்றன எனவும், அவற்றைக், கோலம் என்றும், குறிக்கின்றான். இந்தக் கோலங்களே, ஞாலத்தை உருவாக்கின என்றும், முடிவாகக் கூறுகின்றான்.

அவன் கூறும் துகளை, இன்று நாம், அணு என்று அழைக்கின்றோம். அதாவது, அணுவிலுள்ள மூலம், கால ஓட்டத்தால், சீலமாகி, அச்சீலம், கோலங்களை உருவாக்கி, ஞாலத்தை ஏற்படுத்துகின்றது என, மிக விரிவாக விளக்குகின்றான்.
இத்தகைய நல்ல விஞ்ஞானக் கருத்துக்களைக் கூறும் மயன், அடுத்து, மூலம், தன்னை வெளிப்படுத்திக்கொள்ள, ஒரு விசையை ஏற்படுத்திக், காலத்தை (காலமாக் கடவுளை) உண்டாக்கி, அதனைக் கட்டுப்படுத்திச், சீலமாக்கி, அதிலிருந்து, கோலங்களை உருவாக்கி, ஞாலங்களைப் படைத்துக் கொள்கின்றது, எனக் கூறி, மூலப் பொருளே, ஞாலமாக வியாபிக் கின்றது எனும் சமயத் தத்துவத்தையும், எமக்குச் சொல்கின்றான்.

அணுவின் உள்ளிருந்து, ஒடுங்கி விரியும் ஒளியின், சீரான நடுக்கத்தை, ஆடல் என்று கூறி, அந்த ஆடலுக்கு, மயன் கொடுத்த உருவமே, உலகப் புகழ் பெற்ற, நடராஜ வடிவமாகும். இவன், விஞ்ஞான, சமயக் கொள்கைகளை ஒன்று சேர்த்தே, நடராஜ திரு உருவத்தை, உலகிற்கு ஈந்திருக்கின்றான்.

ஐந்தொழிலையே (மூலம், சீலம், காலம், கோலம், ஞாலம்), தனித் தொழிலாகச் செய்யும் மூலத்தின் வடிவமே, நடராஜ திருவுரு என்கின்றான். சிற்றம்பலத்தினுள், என்றும் நின்று நடம்புரியும், ஒளிநடராஜனாக விளங்கும் பரம் பொருளை, மயனால், இவ்வுலகம் அறிகின்றது.
ஈழத் தமிழ் மன்னனான மயன், உயிர்ப்பும், உணர்வும், இசையும், நடமும், காலமும், விளக்கும் நடராஜத் திருவடிவை, மாசிமகம் எனும் முழுமதித் திருநாளன்று, இந்த உலகிற்கு உவந்தளித்தான். ஆதலால், தமிழர்கள், மாசி மகத்தை, ஒரு பெருந்திருநாளாகக் கொண்டாடக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்பதை, இங்கு நான் நினைவூட்ட விரும்பு கின்றேன்.

இந்த உண்மைகளை, மயமதம், மாந்தை மாண்மியம், போன்ற நூல்களைப் படித்து, அறிந்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!