Posts

Showing posts from March, 2015

கிறுக்கல்ஸ்-2

பிரிண்டர் துப்பிப்போட்ட அச்சடித்த காகிதமா என் காதல் # படித்தவுடன் கிழித்துவிட்டாயே!!! ****** மேகமாய் உன்னை தீண்டி தீண்டி உயிர்த்துரப்பேன் , நீல வெளியாய் நீ நிறைந்திருந்தால்...!!!!! ***** வீடு விரட்ட அனாதையானேன் , காடு விரட்ட பறவையானேன் , நாடு விரட்ட அகதியானேன் , நீயும் விரட்ட பிணமாகிப்போனேன்...... **** என் இதயத்தைப் போல் தான் பூக்களைப் பறித்தாய் , அவற்றிற்கு மட்டும் மோட்சம்.....!!! ஏன் எனக்கு மட்டும் உன் இதயக்கூட்டில் சிறைவாசம் ....!!! **** உன்னிடம் உறவாட முயன்று தோற்றது ஒன்று நான் மற்றொன்று தென்றல் ...! ***   உறக்கத்திலும் விழித்துக்கொண்டு தான் இருக்கிறேன் ….. என் நினைவுகளில் நீ இருப்பதால்...!! *****  

இரத்த தானம்- பர்ஸ்ட் அட்டம்ப்ட்(first attempt) ......

Image
      காலையிலே அப்பா பிளட் டொனேட் (blood donate) பண்றியாடா எனக்கேட்டார். ‘ ஏன்பா திடீர்னு கேக்குறீங்க ??’ இல்லடா தளபதி பிறந்த நாள்னு (மு.க.ஸ்டாலின் ) தமிழ்நாடு   பூரா இரத்ததான முகாம் நடத்துராங்க நான் கொடுக்கபோறேன் நீயும் வந்தா நல்லாயிருக்கும் , அடிக்கடி பிளட் டொனேட் செஞ்சா உடம்புக்கு நல்லது என அழைத்தார். நா ன் யோசித்தேன் , சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு எங்கள் கல்லூரி வளாகத்தில் போக்குவரத்துத்துறை இரத்தான முகாம் நடத்தியது , அப்போது மாலை கிளம்பும் போது பாதி இரத்தத்தை கீழே கொட்டிவிட்டு தான் சென்றார்கள்.அதே போல் வீணாக்கிவிட மாட்டங்களாப்பா ?? எனக் கேட்டேன். இல்லடா , எல்லா இரத்தத்தையும் பர்பெக்ட்டா பிளட்பேங்க்ல சேர்த்திவடுவாங்க என நம்பிக்கை தெரிவித்து அழைத்துச் சென்றார்.      ஜெயங்கொண்டத்தில் ஒரு திருமண மண்டபத்தில் இரத்த தான முகாம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. உள்ளே நுழைவுவாயில் முழுவதும் கரை வேட்டிக்காரர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். அப்பா அவர்களிடம் சிறிது நேரம் ஏதோ   பேசிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார். எல்...

6174.

Image
6174   ஒரு நான்கு நம்பரை வைத்துக்கொண்டு இவ்வளவு சிறந்த அறிவியல் புனைகதையை   சுதாகர் தருவார்     என அடியேன் நினைக்கவே இல்லை , புத்தகம் முழுவதும்   அறிவியல் குறிப்புகள் , வரிக்குவரி   மனிதர் விளையாடியிருக்கிறார். ஒரு 400 பக்க நாவலை எந்த வித சோர்வும் இல்லாமல் படிக்க வைத்ததற்கே பொக்கே கொடுக்கலாம். புத்தகம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணிக்கிறது , லெமூரியர்கள் காலத்தில் தொடங்கி இக்காலத்தில் முடித்திருக்கிறார் , கணக்கியல் கோட்பாடுகளையும் விட்டு வைக்கவில்லை , கணிதத்தை நம் ஆன்மீகத்தோடு கலந்து ஒரு கொத்து ப்ரோட்டாப் போட்டிருக்கிறார் . எகிப்து பிரமீடையும் , நம் கோவில் கோபுரத்தையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். புத்தகம் முழுவதும் இலக்கிய விடுகதைகளாகவும் , அவற்றை கதைமாந்தர்கள் ஒவ்வொன்றாய் கண்டறிவதாகவும்  சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படித்துப்பாருங்கள்.  name: 6174  publisher; vamsi books   price;300