சப்த கன்னிகைகள், காம தேனு, இந்திரனின் வெள்ளை யானை.....
மற்றுமொரு ஆன்மீக வாரம் ... ஆம் .. மாதம் தோரும்
சிவத்தலங்களுக்கு குடும்ப உறுப்பினர்களோடு செல்வது வழக்கம் தான்,இருந்தாலும் இந்த வாரம் சற்றே விஷேசமானது, சென்ற கோவிலும் கூட, கோவிலின்பெயர் ”ஸ்ரீ்
பிரளயகாலேசுவரர், பெண்ணாடம்” , கோவிலைப்பற்றி பேசுவதற்க்குமுன்னர் ஊரைப்பற்றி
தெரிந்து கொள்வோம்.பெண்ணாடம்=பெண்+ஆ+கடம்,
பெண்=சப்தகன்னிகைகள்,
ஆ= காமதேனு,
கடம்=யானை (குறிப்பாக இந்திரனின் வெள்ளை
யானை),
சப்தகன்னிகைகள்,காமதேனு,யானை,இவை மூன்றும் இக்கோவிலுக்கு வந்து தொழுதமையால்,அவ்வூருக்கு
‘பெண்ணாகடம்’ எனப் பெயர்
வந்ததாகவும்,அதுவே பின்னர் ‘பெண்ணாடம்’ என மறுவியதாகவும் கூறுகின்றனர்.
ஒவ்வொரு கோவிலனது சிறப்பையும் அங்கு குடி
கொண்டிருக்கும் கடவுளின் பெயராலே அறிந்து கொள்ளலாம். ஸ்ரீ்பிரளயகாலேசுவரர், பிரளயம் தோன்றும்பொழுது
காத்தருளியவர் என்பது பெயராலேத் தெளிவாகிறது.(பிரளயம் என்பது லட்சம் ஆண்டுகளுக்கு
ஒரு முறை ஏற்படும் எனவும் ,அப்பொழுது அனைத்து
உயிர்களும் மடிந்து பின்னர் புது யுகம் பிறக்கும் எனவும்,பிரளயத்தின்
போது காக புஜண்டர் மட்டுமே காக்கை உரு கொண்டு வானில் பறந்து உயிர்பிழைப்பார்
எனவும் சொன்னார்கள்) எல்லாக் கோவிலிலும் நந்தியானது சிவனை
நோக்கி இருக்கும் பொழுது,இக்கோவிலில் மட்டும்
நந்தியானது எதிர் திசை பார்த்து நின்றது,”ஏன்?” என அடியேன் வினவவே,நந்தியானது எதிர் திசையில்
திரும்பி,பிரளயத்தை தன் வாயால் விழுங்கி ஊரைக்காப்பாற்றியதாகவும்
தெரிவித்தார்கள்.
அப்படியே கோவிலை வலம் வந்துகொண்டிருந்தேன்,எதேச்சையாக
கல்வெட்டை கவனிக்கும் பொழுது யாரோ ஜெனரேட்டர் அன்பளிப்பாக அளித்திருந்தார்கள்,பெயரை கவனித்தேன், ”இஸ்லாமிய
தம்பதிகள்” அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்கள்,ஒரு சிவத்தலத்திற்கு இஸ்லாமியர் உதவியிருப்பது, உதவியதாக அடியேன் பார்ப்பது இதுவே முதல்முறை.
ஒவ்வொரு முறை சிவத்தலத்தை
சுற்றி வருவதால் உண்டாகும் நன்மைகளை பட்டியலிட்டிருந்தார்கள் , ஒட்டுமொத்தமாக 21 முறை வலம் வந்தால் , அனைத்து நன்மைகளும் கிட்டும் ( வீடு பேறு, மன அமைதி , எண்ணிய காரியத்தில் வெற்றி, மக்கட் பேறு,உள்ளிட்ட பல), அதிலும் காலை,மதியம்,மாலை,இரவு என சுற்றிவரும் நேரத்திற்கு ஏற்ப பலன்களும் மாறுபடுகின்றன. காலை வேளை
தான் அதீத நன்மைகளை கொண்டிருக்கிறது. அடியேனால் 13 முறைமட்டுமே
வலம் வர முடிந்தது,மதிய வெயிலில் தலை வேறுவலிக்க ஆரம்பித்துவிட்டது,மயக்கம் வருவது போல் இருந்ததால் 13 முறையோடு நிறுத்திக்கொண்டேன்,அடுத்த முறை காலையிலேயே சென்று 21 முறை வலம் வர வேண்டும் என எண்ணியிருக்கிறேன்.

Comments
Post a Comment