நான் திருடினேனா?
மணி ஏறக்குறைய ஒன்பது......
“இன்னும் கொஞ்சம் நேரம் தான்
இருக்கு, ப்ரேயர் பெல் (prayer bell)அடிச்சுடும், அது வரையும்
அவன் கண்ணுல சிக்காம இருக்கனும்” , என மனதில்
எண்ணிக்கொண்டேன்..பள்ளி வேலை துவங்கும் முன்பு தினமும் நண்பர்களோடு வியர்க்க விருவிருக்க
“ஒளியல்” ஆட்டம் விளையாடுவது வழக்கம்.அன்றைய நாள் அடியேன் தான் ஹீரோ. ஏனென்றால் சுமார்
முக்கால் மணி நேரமாகப் சிக்காமல் தண்ணிக்காட்டிக் கொண்டிருந்தேன். இரவில் விளையாடுவதை
விட பகலில் “ஒளியல்” ஆட்டம் விளையாடுவது கடினம். அவன் அருகில் வருவதைக்கண்டு , அவனிடம் சிக்காமல் இருக்க வேகமாக ஓடினேன்.............
பட்..... பொத்............. ஸ்ஸ்ஸ்ஸ் ப்பா....கட்டிடம்
கட்ட வைக்கப்பட்டிருந்த கம்பியினைத் தாண்டும் பொழுது ஸ்லிப்பர்(செருப்பு)
கம்பியில் சிக்கி தடுமாறி கீழே விழுந்தேன்.சட்டையெல்லாம் அழுக்காகிவிட்டது. கண்களில்
மண் தெறித்து விழுந்தது.கைகளில் லேசான சிராய்ப்பு. பெரிதாக வலி இல்லை .கைகளை துடைத்துக்
கொண்டு எழும் தருவாயில் ஏதோ மின்னியது. ஆம்
காசு தான். சுற்றும் முற்றும் பார்த்தேன் .யாரும் என்னை கவனிக்கவில்லை. ஒரு ஐந்து ரூபாய், இரண்டு ஒரு
ரூபாய், ஒரு இரண்டு ரூபாய், ஆக மொத்தம் ஒன்பது ரூபாய், வலதுகையில்எடுத்து இடது கால் சட்டைப்பையில்
லபக்கினேன். . நண்பனும் பின்னால் கட்டியணைத்து ’அவுட்’ என லபக்கினான்.
****
ஒரு மணி நேரம் முன்பு காலை எட்டு மணி......
ஆட்டோவில் பள்ளிக்கு நசுங்கி
பிதுங்கி வந்து இறங்கினேன். பள்ளி வாசலில் பாட்டிகள் இருவர் விதியாலோ , பெற்ற பிள்ளைகளாலோ நடுத்தெருவில் விரட்டப்பட்டு
சொச்சகாலத்தை ஓட்டுவதற்க்காக சாக்கில் திண்பண்டங்களை பரப்பி விற்றுவரும் வருமானத்தில்
வாழ்ந்துக்கொண்டிருந்தார்கள் .நண்பன் அக்கடையில் பால்கோவா வாங்கினான்.
எனக்கோ நாவில் எச்சில் ஊறியது. நான் “எனக்குடா?” எனக்
கேட்டேன்.அவன் தரவில்லை .தராவிட்டாலும் பரவில்லை அவன் என்னை வெறுப்பேற்றினான் .நானோ
கோபத்தின் உச்சத்தில் , ஏமாற்றத்தின் வலியில் தவித்துக் கொண்டிருந்தேன்.
கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது ,நாம் நினைத்தது எதிர்பர்த்தது
கிடைக்காததால் வந்த ஏமாற்றத்தால் உண்டான கண்ணீர் அது ”நீ உள்ளவாடா உன்ன விளையாட்டுல
பழிதீத்துக்குறேன்” என மனதிற்க்குள் பொருமிக்கொண்டிருந்தேன்.விளையாட்டில் பழியும் தீர்த்தாயிற்று
.
****
அந்த ஒன்பது ரூபாயை கையில் எடுத்த நொடி முதல் என் மனதில் பால்கோவா பட்டாம் பூச்சியாக பறந்துக்
கொண்டிருந்தது.பொதுவாக கீழே கிடந்த காசினை எடுத்தால் உண்டியலில் போட்டுவிடுவது வழக்கம்.ஆனால்
அன்று அவ்வாறு நான் செய்யவில்லை,இல்லை
அப்படி செய்ய வேண்டும் எனத் தோன்றவில்லை அடிக்கடி
அந்த காசினை எடுத்து சரி பார்த்துக் கொண்டிருந்தேன்..அது வளர்ச்சி பெறவே இல்லை. ஒன்பது
ரூபாயாகவே மாலை பள்ளி விடும் வரை இருந்தது. நண்பன் நான் காசு வைத்திருப்பதைப் பார்த்து
விட்டான் பள்ளி விட்டதும் “பால்கோவாவை” வாங்க விரைந்தேன்.எனக்கு முன்பே அவன் அங்கு
நின்று கொண்டிருந்தான்.”டேய் சாரிடா?, நான் உனக்கு காலைல பால்கோவா ,ஏன் தரலைனா? அத நான்
எச்சிப் பண்ணிட்டேன்டா,அதான்தரலை அதுக்காக இப்ப நீ வங்கி தரலைனா ? நாளைக்கு உனக்கு கல்கோனா வாங்கி தரமாட்டேன்டா?” என ஐஸ் போட்டான்.எனக்கும் நாளைக்கு கிடைக்க போகும் கல்கோனாவுக்காகவாவது கொடுக்கலாம்
எனத் தோன்றியது கொடுத்தேன் ,இருவரும் கைக் கோர்த்துக் கொண்டு,கோணிப்பை ஆயாவுக்கு டாட்டா காட்டிவிட்டு ஆட்டோவில் வீடு செல்ல ஏறியது இப்பொழுதும்
நினைவில் நிற்கிறது.
****
Ø
இங்கு நான் கீழே கிடந்த காசை எடுத்ததால், திருடனா???
Ø
நண்பனை விளையாட்டில் அலையவைத்து வதைத்ததால், கெட்டவனா?
Ø
மீண்டும் மாலை நண்பனுக்கு எல்லாவற்றையும் மறந்து
வாங்கிக் கொடுத்ததால், நல்லவனா?
ஒரே நாளில் எத்தனை விதமாக மாறி மாறி செயலாற்றி
இருக்கிறேன்.
lusu maradhi idula en unaku vara matengudu unaku.....
ReplyDeleteYarukku theriyum ...enaku memory power jasthi...
Deleteintha ulagam than namba,,,, namala nalavangaum ketavanagavummm mathuthu...
ReplyDeleteso mistake nama mela illa
Haha unaku yar ipdilam pesa solli thara....
Delete