வேடிக்கை மனிதர்கள்....
ஏட்டுக்கல்வி( kinder garden),தொடக்கக்
கல்வி, நடுநிலைக்கல்வி முடித்து உயர்நிலையில் நுழையும் தருவாயில்
பார்ப்பவர்கள் (தொலைத்தூரசொந்தங்கள்எனக் கொள்க)
எல்லாம் “பெரியப்பையனா வளர்ந்துட்ட, இதுக்கப்புரம் படிப்புல தான் கண்ணா இருக்கனும்,யாரையாவது ரோல்மாடல் ஆ
வச்சுக்கோ அவங்கள பாலோ பன்னு ,லைப்ல ஜெய்க்கலாம்” என தவறாது
அட்வைஸ் மழை பொழிந்தார்கள். (அட்வைஸ் என்பதை விட அறுத்துத் தள்ளினார்கள்). சரி
பின்பற்றலாம், யாராவது சிக்காமலாப் போய்விடுவார்கள் எனக்
காத்திருந்தேன்.அத்தருணத்தில் தோழி ஒருத்தி ,தேர்வில்
அதிகமதிப்பெண் பெற்றதற்க்காக “ படிப்பதுசுகமே” என்ற புத்தகத்தை அன்பளிப்பாக
அளித்திருந்தார்கள் .அதை படிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது . புத்த்ககம் முழுக்க
படிப்பைப் பற்றி மட்டுமே பேசியது( புத்தகத்தின் பெயரைத் தவிர எதுவும் இப்ப ஞாபகம்
இல்லப்பா!!! மன்னிச்சுக்கோங்க)…….. யரடா??? இவர் என வினவிய பொழுது கிட்டியது அற்புதமானபதில்,
தமிழ் வழியில் IAS தேர்வு எழுதியவர் எனத் தெரியவரவே(அவர்
தமிழ் வழியில் தான் பாஸ் பண்ணியதாக கூறினார்கள்!!!?/) அடியேன்
அவர் மேல் மையம் கொண்டேன்.
அவர் புத்தகங்கள்
எல்லாம் தேடத் தொடங்கினேன்.”உன்னோடு ஒரு நிமிடம்” என்ற புத்தகத்தை இரண்டு முறைக்கு
மேல் படித்திருப்பேன். அவருடைய ”போர்த்தொழில்பழகு” தொடருக்காகவே புதியத்தலைமுறை புத்தகத்தை
வாங்கியதுண்டு.இடையில் அடியேன் புத்தகம் படிக்கும் பழக்கத்தையே அடியோடு மறந்துவிட்டேன்.
இந்தவருட புத்தாண்டு
சபதங்களில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை தொடர வேண்டும் என அவா கொண்டு குறிப்பிட்ட
சிலரின் புத்தகங்களை இந்த ஆண்டு படிக்க வேண்டும் என எண்ணியிருந்தேன்.அதில்
இறையன்பு அவர்களும் ஒருவர். சரி அவருடைய எந்த புத்தகம் வாங்கலாம் என அமேசானில் துழாவிய
பொழுது “வேடிக்கைமனிதர்கள்” புத்தகம் சிக்கியது. இறையன்பு அவர்கள் வாழ்க்கை
நிகழ்வுகளை அழகாகத் தொகுக்கும் திறமைசாலி.
டைட்டிலில் இருந்தே
அவர் வாழ்க்கையின் சுவாரஸ்யமான நிகழ்வுகள், மனிதர்களைப் பற்றி
தொகுத்திருக்கிறார் எனத் தெளிவாகத் தெரிந்தது. ஆம் புத்தகம் முழுவதுமே அவற்றைதான்
தொகுத்திருக்கிறார் .அவர் குறிப்பிடும் மனிதர்கள் சம்பவங்கள் கண்டிப்பாக நம்
வாழ்க்கையில் நடந்திருக்கும். அவர்கள் நம் பார்வையில் வேடிக்கையாவேத் தெரிவார்கள்.
நாமும் அவர்களை வேடிக்கையாகவேத் தாண்டி
சென்றிருப்போம். இந்தப் புத்தகம் அவர்களின் நினைவை நமக்கு ஏற்படுத்தி ஒரு
நமட்டுச்சிரிப்பை உதட்டில் வரவழைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை
“வேடிக்கைமனிதர்கள்”
“வெ .இறையன்பு”
“ விஜயா பதிப்பகம்”
“ரூபாய்130/-“
Comments
Post a Comment