6174.
6174
ஒரு நான்கு நம்பரை வைத்துக்கொண்டு இவ்வளவு சிறந்த
அறிவியல் புனைகதையை சுதாகர்
தருவார் என அடியேன் நினைக்கவே இல்லை, புத்தகம் முழுவதும் அறிவியல் குறிப்புகள் , வரிக்குவரி மனிதர் விளையாடியிருக்கிறார்.
ஒரு 400 பக்க நாவலை எந்த வித சோர்வும் இல்லாமல் படிக்க வைத்ததற்கே பொக்கே கொடுக்கலாம்.
புத்தகம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணிக்கிறது, லெமூரியர்கள் காலத்தில்
தொடங்கி இக்காலத்தில் முடித்திருக்கிறார்,கணக்கியல் கோட்பாடுகளையும்
விட்டு வைக்கவில்லை , கணிதத்தை நம் ஆன்மீகத்தோடு கலந்து ஒரு கொத்து
ப்ரோட்டாப் போட்டிருக்கிறார் . எகிப்து பிரமீடையும் ,நம் கோவில்
கோபுரத்தையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். புத்தகம் முழுவதும் இலக்கிய விடுகதைகளாகவும்,அவற்றை கதைமாந்தர்கள் ஒவ்வொன்றாய் கண்டறிவதாகவும் சுவாரஸ்யம்
கூட்டியிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படித்துப்பாருங்கள்.
name: 6174
publisher; vamsi books
price;300

Comments
Post a Comment