மை புரபசர் vs மை மைண்ட் வாய்ஸ்(my professor vs my mind voice)…
ஒரு கேள்வி பதில் தொகுப்பு .... இது வெரும் கற்பனையே,யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. அதையும் மீறி புண்படுத்தினால் ஐயாம் வெரி சாரி.....
புரபசர்: ஏன்டா காலேஜுக்கு லேட்???
(
அதில் கூட”ஏன் காலேஜுக்கு லேட்?” என்று தான் கேட்கிறார்கள்.
“ஏன் கிளாஸுக்கு லேட்?” எனக் கேட்பதில்லை..!!! )
மை மைண்ட்
வாய்ஸ்: நைட் ஷோ போய்ட்டு , நைட் தூங்க லேட் ஆகிடுச்சுனு உண்மையச் சொன்னா விடவாப்
போற ??
***
புரபசர்: ஏன்டா அசைன்மன்ட் எழுதல??
மைண்ட்
வாய்ஸ்: அது என்ன கருமம்னு
தெரிஞ்சாதான எழுதருதுக்கு!!!
****
புரபசர்:ஏன்டா டெஸ்டுக்கு படிக்கல?
மைண்ட்
வாய்ஸ்: எங்களுக்கு
இன்னைக்கு டெஸ்ட்டுனே தெரியாதே???!!!
****
புரபசர்: ஒழுங்கா காலேஜ் வந்தா தான் , இந்த சப்ஜக்ட் புரியும் !!!
மைண்ட்
வாய்ஸ்:நாங்க டெய்லி
வந்துட்டாலும் , நீ
நடத்தி புரிஞ்சுட்டாலும்???
இந்தியா வல்லரசாகிடாதா???
*****
புரபசர்: இந்த மாதிரி “வொர்ஸ்ட் பேட்ஜ்”-ஐ( worst
batch) என்னோட இத்தனை வருச எக்ஸ்பீரியன்ஸ்ல பார்த்ததே கிடையாது???
மைண்ட்
வாய்ஸ்: டையலாக்க (dialogue )மத்துங்க பா??
***
புரபசர்: நீயெல்லாம் எங்க உருப்படப் போற ???
மைண்ட்
வாய்ஸ்: உங்கிட்ட
படிச்சுட்டு எப்படி உருப்பட முடியும்
****
புரபசர்: எதுமே
தெரியலை ? நீ
எல்லாம் எப்படி பாஸ் பன்ன போற?? வாழ்க்கைல உருப்பட போற??
மைண்ட்
வாய்ஸ்: எதுவுமேத் தெரியாம
நீங்க எப்படி புரபசர் ஆனீங்க ?? அந்த மேட்டர் தான் எங்களுக்கு இன்ஸ்பிரேசன்.
***
புரபசர்: உன்னலாம் கடவுள் தான் காப்பாத்தனும்?
மைண்ட்
வாய்ஸ்: பின்ன இன்டர்னல்(internal) இருபதுக்கு இருபது போட்டு நீங்களா
காப்பாத்தப் போறீங்க?
****
புரபசர்: ஏன்டா வெள்ளிக்கிழமை ஆனாலே எவனும் காலேஜ்
வரமாட்டேன்றீங்க?
மைண்ட்
வாய்ஸ்: பார்ஸ்ட் டே
பர்ஸ்ட் ஷோ(first day first
show) பார்க்கலனா? நான் இன்ஜினியரிங்
ஸ்டூடண்டா இருக்கருதுல அர்த்தமே இல்லையா!!!
****
புரபசர்: மத்த டிப்பார்ட்மண்ட் பொண்னுங்க கிட்ட
என்னடா பேச்சு?
மைண்ட்
வாய்ஸ்: இங்க பேசுற மாதிரி
ஒன்னும் இல்லையா!!!!
******
புரபசர்: டெய்லி புதுசா எதாவது கத்துக்கனும் டா?
மைண்ட்
வாய்ஸ்: நீங்க புதுசா
எதாவது சொல்லிக்கொடுங்க தெய்வமே!!!
****
புரபசர்: என்னோட மொத்த அனுபவத்தை தான் உங்களுக்கு பாடமா
சொல்லிக் கொடுத்தேன்
மைண்ட்
வாய்ஸ்: கத்துக்கிட்ட மொத்த
வித்தையையும் இறக்கிட்டார் போல,அடுத்து டியூன் ஆக வேண்டியது ஒன்னு தான் பாக்கி.
***
புரபசர்: மொதல்ல டிசிப்ளின (discipline) கத்துக்கோங்க மத்ததெல்லாம் தானா வரும்
மைண்ட்
வாய்ஸ்: சார் நம்ம காலேஜுல , நம்ம தமிழ்நாட்டுல , ஏன் நம்ம
இந்தியாவுலயே அந்த கோர்ஸ் இல்லையாம். கடல்லையே இல்லையாம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
thambi unmaya sonaduku valthugal......ana pala idathula sensor venumya..
ReplyDeletePotudlam sensor....but enganu thrlaye
Delete