ஸ்பெஷல் பங்சனும் , ஸ்பெஷல் வேண்டுதலும்......



     “பாய் ரிசல்ட் என்ன ஆச்சுடா ?”
     “ஆல் கிளியர் டா ”
     “ஸ்பெஷல் பங்சன்???
     “அதுவும் கிளியர் டா “
     “ எப்படி டா??”
     “நான் ஒன்னுமே எழுதல , எப்படியோ கிளியர் ஆகிடுச்சு !.... எல்லாத்துக்கும் அல்லா தான் காரணம் , டெய்லியும் ஸ்பெஷல் பங்சன் கிளியர் ஆகனும்-னு அல்லா கிட்ட ஸ்பெஷலா வேண்டிக்கிட்டேன். அவர் தான் காப்பாத்திவிட்டார். ”
     “அப்படியா !!!! சரிடா “

கடந்த முறை செமஸ்டர் தேர்வு ரிசல்ட் வந்த பொழுது எனக்கும் பாஷா பாய்க்கும் நிகழ்ந்த உரையாடல் இது..தான் ஆல் கிளியர் செய்ததற்கு காரணம் அல்லா தான் என நண்பன் கூற , அடியேன் நான் வெஜ் சாப்பிடும் தீவிர சிவ பக்தன் ஆக இருப்பினும் , ஆல் கிளியர் ஆக வேண்டும் என வேண்டிக்கொள்ளாதது பற்றி சற்று வருத்தம் கொண்டேன். இவ்வுலகில் கடவுளின் துணையன்றி சில விஷயங்கள் நிகழாது என அடியேன் அப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.
     நாமும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம், ‘’எப்படியாவது?? இம்முறை இந்த பேப்பர் “கிளியர்  ஆக வேண்டும்” என்று முடிவெடுத்தேன். இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக்கொள்வதா?? அல்லது குல தெய்வத்திடம் வேண்டிக்கொள்வதா??? என குழப்பமானேன். . குல தெய்வம் தான் குலம் காக்கும் என பெரியப்பா என்றோ கூறியது நினைவு வந்தது சரி குல தெய்வத்திடமே வெண்டிக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். என்ன வேண்டிக்கொள்வது???? என யோசித்த பொழுது, “நண்பன் சந்தோஷ் இந்த பேப்பர் கிளியர் ஆனால் மொட்டை போடுவதாக சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டிக்கொண்டு., கிளியர் ஆனதும் மொட்டை போட்டது ஞாபகம் வந்தது.”  அடியேன் மொட்டை போட்டால் காண்பவர் கண்கள் பொசுங்கி போகும்,குழந்தைகள் தலை தெறிக்க மிரண்டு ஓடும் என்பதால் சமூக நல்லெண்ணத்தோடு மொட்டை போடும் யோசனையைத் தவிர்த்தேன். இந்த பேப்பர் கிளியர் ஆனால் உமக்கு நூறு ரூபாய் உண்டியலில் போடுவதாய் வேண்டிக்கோண்டேன்.(( பெரிய தொகையாக வேண்டிக்கொள்ளலாம் தான். இருப்பினும்,” பேப்பர் கிளியர் ஆகுமா??” என மீண்டும் சந்தேகம் எழவே தொகையைக் குறைத்தாயிற்று)) ஆறு மாதம் காத்திருந்து மீண்டும் அப்பேப்பரை எழுதி ரிசல்ட்டுக்காககாத்திருந்து, இதோ !!! கடந்த வாரம் ரிசல்ட் வந்து ஆல் கிளியரும் செய்துவிட்டேன் .
        ஆல் கிளியர் ஆன நொடி முதல் ஐ கடவுள் இருக்கிறார் நம் வேண்டுதல் வீணாகவில்லை என ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறேன்.வேண்டுதலை நிறைவேற்றுவது ஒன்று தான் பாக்கி.

பின் குறிப்பு; இந்த ஸ்பெஷல் பங்சனானது ஒரு கணித பேப்பர் ,ரிசர்ச் பேப்பர், ஒட்டு மொத்த தமிழகத்திலே பாவம்!! என் போன்ற பெட்ரோ கெமிக்கல் மாணவர்களுக்கு மட்டுமே இருக்கிறது.இந்த பேப்பரை கிளியர் செய்ய முடியாமல் bpo ல் சீனியர் பலர் வேலை பார்க்கிறார்கள். பலர் டிப்பிரசனில் தற்கொலைக்கே முயன்றிருக்கிறார்கள் என்றால், அதிலிருந்தே எப்பேர்பட்ட கடினமான பேப்பர் என அறிந்து கொள்க!! இன்னும் 2010,11,12,13,14 ல் பாஸ்அவுட் ஆகிய சீனியர்களெல்லாம் வந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த பேப்பரால் வேலைக்கு செல்ல இயலாமல் பலர் தண்டசோறு தின்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த பேப்பர் எந்த விதத்திலும் எங்கள் எதிர்காலத்திற்கு உதவப்போவதில்லை.பிறகு எதற்க்காக இதை வைத்திருக்கிறீர்கள்?? என்ற கடும் கண்டனத்திற்குப் பிறகே! இனி வரும் மாணவர்களுக்கு வைக்கப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள்.
மிக நல்ல முடிவு .... வரவேற்க்கத்தக்கது... அரியர் வைத்திருக்கும் அனைவரும் பாஸாக வேண்டும் என முழு மனதோடு வேண்டிக்கொள்கிறேன்....

Comments

Post a Comment

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!