அண்ணன் கருப்பையாவோடு ஒரு “இசை”ப்பயணம்.........


     கருப்பு அவர்களை கடந்த முறை கடுமையாக விமர்சித்தமையால் , அண்ணன் சற்று அப்சட்டாக இருந்தார். எப்படியாவது தன் மேல் நல்ல அபிப்ராயம் மற்றவர்களுக்கு வர வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார். அதன் சிறு முயற்ச்சியாக நான் வேண்டாம் எனக் கூறிய போதும் எல். ஏ. சினிமாவில் “இசை”திரைப்படத்திற்கு 2 டிக்கட்டுகளை புக் செய்துவிட்டார்.அண்ணன் இரண்டரை ஆண்டுகளில் இதுபோன்று டிக்கட் புக் செய்தது இல்லை. அதனால் ,ஆச்சரியத்தோடு விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் அண்ணன் “ டிக்கட்டுக்கு நான் காசு போட்டுக்கிறேன், ஸ்நாக்சுக்கு நீ போட்டுக்க ?!!” என கூறினார். எனக்கோ தூக்கி வாரிப்போட்டது . ஏனென்றால் டிக்கட்டை விட ஸ்நாக்சுக்கு தான் எல். ஏ .தியேட்டரில் செலவாகும்.    “வேண்டாம் வேண்டாம் நான் டிக்கட்டுக்கு காசு கொடுத்துடுறேன் , ஸ்நாக்சு செலவை ஷேர் செய்து கொள்ளலாம்  “ என கூறினேன் . அண்ணனும் தலையசைத்தார்.
     6.40 ஷோவுக்கு அரக்க பரக்க கெளம்பி போய் சேர்ந்தோம்.போனதும்  சில பல செல்பிகளை எடுத்து தள்ளினோம். தியெட்டருள் நுழைந்ததும் டால்பிஅட்மாஸ், 3600சவுன்ட் , ஓவர் ஹெட் ஸ்பீக்கர்ஸ் என மிரள வைத்துவிட்டார்கள். இனி இங்கு தான் படம் பார்க்க வர வேண்டும் என எண்ணிக்கொண்டேன். என்னை அறிந்தால் டிரெயிலர் ஓடும் பொழுது எவனோ ஒருவன் காய்கறி அறிந்தால் என பெயர் வைத்திருக்கலாம் எனக் கூற அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தார்கள்.
இசை படம் தொடங்கி முதல்பாதி முழுவதும் இரட்டை அர்த்த வசனங்களாலும் , சீன் காட்சிகளாலும் சீட்டில் கட்டுண்டு கிடந்தார்கள்.  இரண்டாம் பாதி தான் சற்று சோடைத்தட்டியது. ரஹ்மான், இளையராஜா வோட மோதலின் பாதிப்பு தான் படம் என அப்பட்டமாகத்தெரிந்தது. சத்யராஜ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். S.j. சூர்யா இரட்டை அர்த்த வசனங்களை மிக அழகான மாடுலேஷனில் உருத்தாமல் நடித்திருக்கிறார்.சவித்திரி கிளாமரில் கலக்கியிருக்கிறார். படம் முழுவதும்அவர் ராஜ்ஜியம் தான் . இளைஞர்கள் சொக்கி தான் போனார்கள் அவர் அழகில். “அண்ணன் வேற வாழ்ந்துட்டான் டா. செம டா . முடிச்சுட்டான் டா என குதூகலத்தில் பொறாமையில் பொங்கினார்”முதல் படத்திலேயே ப்ரமாதமாக இசையமைத்திருக்கிறார் எஸ்.ஜெ.சூர்யா. பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. கேமராமேன் யார் எனப் பார்த்து அவருக்கு     ஒரு பொக்கே கொடுக்க வேண்டும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
     முதல் பாதி கிளாமரிலும் , இரண்டாம் பாதி சைக்கோத் தனமாகவும் செல்கிறது. வழக்கமாக செல்வராகவன் தான் இம்மாதிரி சைக்கோ கதைகளை எடுப்பார் .ஏனோ இம்முறை எஸ்.ஜெ.சூர்யா கையில் எடுத்திருக்கிறார். அவர் என்னமோ ஹை டிப்பிரசனில் நடிக்க முயன்றிருந்தாலும் நமக்கு அது சைக்கோத்தன மாகவே தோன்றுகிறது. ஒருவனை வெல்ல அவன் மனத்திடத்தை தாக்கினாலே போதும் , வீழ்ந்து போவான். அதை  தான் படத்தில் டைரக்டர் தனக்கே  உரித்தான பாணியில் எடுத்திருக்கிறார். படத்தை பார்க்கலாம் . இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும் . படம் தான் சற்று நீளம் 3மணி நேரம் 10 நிமிடங்கள்....
           அண்ணன் படம் முடிந்தும் சவித்திரி புகழ் பாடிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக டாரன்டில் நல்ல பிரின்ட் வந்ததும் அண்ணன் சாவித்திரிக்காக  அதை டவுன்லோடு செய்துவிடுவார். இது சத்தியம். சாவித்திரி ரசிகர் மன்றம் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.... அந்த அளவு வெறித்தனமான  ரசிகர்ஆகிவிட்டார்.....
      

Comments

Post a Comment

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!