தேடி ஓடுனேன்..!!!
ஒன்னுமே தெரியலை !! எதுவுமே புரியலை!! கர்நாடக வந்த புதுசுல பெரிய பிரச்சனையா இருந்தது இந்த language தான். சும்மா ஒரு ஐந்து நிமிஷம் அமைதியா இருக்காத நான் இங்க வந்ததுல இருந்து பேச ஆள் இல்லாம தவியா தவிச்சுக்கிட்டு இருந்தேன்.ஊர்ல இருக்கும் பொழுதெல்லாம் பெரும்பாலும் புக்ஸ் தான்.டெய்லி இல்லாட்டியும் காலேஜ் லைப்ரரில போர் அடிக்கிறப்பலாம் books, newspaper தான் கதினு கிடப்பேன்.டெய்லி போகலாம் பட் id card கேட்டு டார்ச்சர் பன்னுவாங்க!. அதனால் மந்திரிங்க மாதிரி அப்பப்போ விசிட். வீட்ல அந்த பிராப்ளம் நகி. என் வீட்ல தினகரன் , சித்தப்பா வீட் ல தந்தி , தினமலர்னு வரிசையா பேப்பர் பார்க்கலாம்.போதாக்கொறைக்கு தெப்பக்குளம் போறப்பலாம் புக்ஸ் , amazon, flipkart னு ஒன்னு விடாம ஆபர்ல எக்கச்சக்கமா புக்ஸ் வாங்கி குவிச்சுவைச்ச்சிடுவேன்.படிக்க , படிக்கவேண்டிய புக்ஸ் எக்கச்சக்கமா இருக்கும்.எந்த கவலையும் , வேலையும் வீட்ல எனக்கு இருந்தது கிடையாது . புக்ஸ் தான் ,… கர்நாடகா கிளம்புறப்ப ரொம்ப அதிகமா லக்கேஜ் சேர்ந்துடக்கூடாதுனு Books – அ கொஞ்ச கொஞ...