கர்நாடகா வெர்ஸஸ் தமிழ்நாடு பார்ட்- 8

எப்பேற்பட்ட அக்பரையும் தூங்க
வைத்துவிடும் வல்லமை கொண்டவை இரண்டு உணவு பதார்த்தங்கள். ஒன்று பொங்கல், மற்றொன்று தயிர்சாதம். இரண்டும் தமிழனின், தமிழகத்தின்
பெருமையை உலகெங்கும் பறைசாற்றிக்கொண்டிருப்பதால் லிட்டில் பிட் ஆப் பெருமை...!!!( இங்கு
அக்பரை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அக்பர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும்
தான் தூங்குவாராம்!!!!)தமிழகத்தில் தயிருக்கு தனி மரியாதை உண்டு ... சாம்பார், வத்தகுழம்பு, ரசம் , பாயாசம், என அனைத்தையும் முடித்துவிட்டு தயிர் ஒரு ரவுண்டு போனால் (சில விருந்துகளில்
டம்ளரில் மோர் வாங்கி பினிஷிங் டச் கொடுப்பதைக் காணலாம்)வரும் பாருங்கள் ஒரு கிரக்கம்
...உஸ் அப்பப்பா...அதெல்லாம் ஒரு வரம்....நம்ம தமிழக கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்தில்
தயிர் எப்போதும் மறக்காமல் இடம் பெறும். கோவில்களில் வழங்கப்படும் தயிர் சாதத்தில்
இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கேரட், திராட்சை, மாதுளை என தயிர் பழங்களின் கூட்டணி.... தனக்கே உரித்தான தனி
சுவையை கொண்டிருக்கும்... கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் 2,3 முறை
க்யூவில் நின்று வாங்கி உண்டு மகிழ்வேன்.
பட், இங்கே கர்நாடகத்தில் வழங்கும்
தயிர் சாதத்தினால் , தயிர்சாதம் மீதான மரியாதையே போச்சு... சாதம் வெந்தவுடன், தண்ணீரை வடிகட்டாமல் அதற்க்குள் 4, 5 தயிர் பாக்கெட்டுகளை
பிரித்து ஊற்றி, நறுக்கிய மிளகாய் , வெங்காயத்தை
கலந்து தயிர் சாதம் என ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் .. டேய் அதுக்குப்பெயர் தயிர்
சாதம் இல்லைடா...” கஞ்சி சாதம்”... இந்த மிளகாய்க்கு பிறந்தவனுங்க தயிர் சாதத்துக்கு
கூட மிளகாயைத்தான் தொட்டுக்க தரானுங்க...!!!
Comments
Post a Comment