மாலை நேர “ஹஜாரி” ....
பெரும்பாலும் நைட் ஷிப்ட்
என்றால் இரு வேளை உண்பது தான் வழக்கம். காலை மற்றும் இரவு. மதிய நேரம் பெரும்பாலும்
உறக்கத்திலே கழியும். இருப்பினும் மாலை வேளைகளில் பசி வயிற்றைக் கிள்ளும். மாலை நேரத்தில்
டீயும், வெங்காய வடையும் தான் உண்டு கொண்டிருந்தேன், இன்று ஒரு
சேஞ்க்கு பானிபூரியை சுவைக்கலாம் என நானும்,சாந்த் அண்ணனும்
சென்றோம். சிறு பூரிக்களோடு. பெரிய பூரியும்
இருந்தது. அது என்னயா? பெருசா இருக்கு.அதை டிரை பண்ணிப்பார்ப்போம் என முடிவெடுத்து, பானி பூரி
வாலாவிடம் கேட்டோம். நாங்கள் ஆங்கிலத்தில் கேட்க அவன் திறுதிறுவென விழிக்க, அவன் ஹிந்தியில்
பதில் சொல்ல நாங்கள் திறு திறு வென விழிக்க, ஒரு வழியாக
சைகை மொழியில் ஆர்டர் செய்தோம் . அதன் பெயர் “ஹஜோர்” ( அப்படித்தான் நினக்கிறேன்) பெயர்
புரியவில்லை.நெட்டில் தேடினேன் அகப்படவில்லை .அண்ணன் சாந்த் அவதானிப்பின்படி அது “ஹஜாரி”.
நாமும் அப்படியே வைத்துக்கொள்வோம்.விட்டுத்தள்ளுங்கள் அதை அவன் prepare செய்த விதம்
தான், நான் இங்கு குறிப்பிட வருவது.
அலுமினிய தோசைக்கல்லை சூடாக்கினான், கொஞ்சம்
எண்ணெய், வெங்காயம், உப்பு , மிளகாய்த்தூள் தூவி இரண்டு கிளறு....இரண்டு பெரிய பூரியை பிச்சுப்போட்டான்.
உருளைக்கிழங்கு மசாலா கொஞ்சம் அள்ளிப்போட்டான்.பானி ரசத்தை இரண்டு கரண்டியும், தக்காளி
சாஸ் போன்ற ஏதோ ஒன்றை இரண்டு டே.பி. ஸ்பூனும் போட்டான். இரண்டு நிமிடம் கிளறினான்.
இரண்டு பிளேட்டில் சரிபாதியாகப் பிரித்தான். அதன் மேலே கொஞ்சம் மிக்சர், தயிர் கொஞ்சம், லிக்யூடு
இனிப்பு கொஞ்சம் தூவிவிட்டு எங்கள் கையில் கொடுத்தான். “ஹஜாரி ரெடி”.அடிக்ட் ஆக வைக்கும்
அளவு சுவை இல்லாவிட்டாலும் 20 ரூபாய்க்கு இது போதும் . பினிஷிங் டச்சாக பானி பூரி ஒரு
ரவுண்டு விட்டோம். என்ன இருந்தாலும் தமிழ் நாட்டில் பானிபூரி சாப்பிடுவது போன்ற திருப்தி
இங்கு ஏற்படவில்லை.
note: actually that dish name is 'kachori'

Comments
Post a Comment