தேடி ஓடுனேன்..!!!



      ஒன்னுமே தெரியலை!! எதுவுமே புரியலை!! கர்நாடக வந்த புதுசுல பெரிய பிரச்சனையா இருந்தது இந்த language தான். சும்மா ஒரு ஐந்து நிமிஷம் அமைதியா இருக்காத நான் இங்க வந்ததுல இருந்து பேச ஆள் இல்லாம தவியா தவிச்சுக்கிட்டு இருந்தேன்.ஊர்ல இருக்கும் பொழுதெல்லாம் பெரும்பாலும் புக்ஸ் தான்.டெய்லி இல்லாட்டியும் காலேஜ் லைப்ரரில போர் அடிக்கிறப்பலாம் books, newspaper தான் கதினு கிடப்பேன்.டெய்லி போகலாம் பட் id card கேட்டு டார்ச்சர் பன்னுவாங்க!. அதனால் மந்திரிங்க மாதிரி அப்பப்போ விசிட். வீட்ல அந்த பிராப்ளம் நகி. என் வீட்ல தினகரன், சித்தப்பா வீட்ல தந்தி, தினமலர்னு வரிசையா பேப்பர் பார்க்கலாம்.போதாக்கொறைக்கு தெப்பக்குளம் போறப்பலாம் புக்ஸ், amazon, flipkart னு ஒன்னு விடாம ஆபர்ல எக்கச்சக்கமா புக்ஸ் வாங்கி குவிச்சுவைச்ச்சிடுவேன்.படிக்க, படிக்கவேண்டிய புக்ஸ் எக்கச்சக்கமா இருக்கும்.எந்த கவலையும், வேலையும் வீட்ல எனக்கு இருந்தது கிடையாது . புக்ஸ் தான்,…
      கர்நாடகா கிளம்புறப்ப ரொம்ப அதிகமா லக்கேஜ் சேர்ந்துடக்கூடாதுனு
Books –அ கொஞ்ச கொஞ்சமா எடுத்துக்கலாம்னு விட்டுட்டு வந்தேன்.அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு.  போர்வைக்கு பதிலா பத்து புக்ஸ். Iron boxக்கு பதிலா ஐந்து புக்ஸ் எடுத்துட்டு வந்திருக்கலாம் . இங்க போர்வையையும் யூஸ் பண்ணலை , அயர்ன் பக்ஸையும் யூஸ் பண்ணலை.வந்ததுல இருந்து தொரனகலுசிட்டி புல்லா தேடிப்பார்த்துட்டேன், ஒரு புத்தகக்கடையும் இல்லை. சரிப்போய்த் தொலைதுனும் விட முடியலை.என்னதான் ஸ்மார்ட்போன் வச்சிருக்கியே ? ஆன்லைன்ல ரீட்பண்ணலாம்னு சொன்னாலும் நான் e-book அ சுத்தமா வெறுக்குறவன்.அது என்னமோ பிடிக்கலை. Hard copy னா நெஞ்சுல வைச்சுக்கிட்டு, படிச்சத கற்பனை பண்ணிக்கிட்டு அப்படியே தூங்கலாம்.பட் e- book ல வச்ச கண்ணு வாங்காம பாத்துக்கிட்டே இருக்கனும்.கண் எரியும்.தலை வலிக்கும்.சீக்கிரம் டயர்ட் ஆகிடுவேன்.hard copy ல எந்தபிரச்சனையும் இல்லை.புது புக்க தொரந்து வச்சுக்கிட்டு மோப்பம் புடிக்கற  கூட்டத்துல நானும் ஒருத்தன்.புத்தக கடை தான் இல்ல, பேப்பர் கடையாவது இருக்கனு பார்த்தேன், எங்கபாரு தமிழ் பேப்பர் இல்லா?. கடுப்பாகி ஒரு இளநி குடிச்சுக்கிட்டு இருந்தேன்.அப்ப பக்கத்து சந்துல , இடுக்குல சின்னதா ஒரு newspaper கடை , சிக்கிடுச்சு... ஒரு மூலைல கரனும் , தந்தியும்அம்போனு கிடந்துச்சு. இளநிய தூக்கிப் போட்டுட்டு பேப்பர்,பேப்பர்னு கத்தனும் போல இருந்துச்சு.கிட்டப்போய் ஒரு பேப்பரை எடுத்து மோப்பம் புடிச்சேன்.அதே மயக்கம் அதே கிரக்கம் . அண்ணே தமிழ் பேப்பர்,புஸ்தகம் எல்லாத்தையும் எடுத்துப்போடுங்க.
“தமிழா?”
“ஆமாம்ணே!!
ஊருக்குப்புதுசா?’.    
“ஆமாம்ணே!!
குங்குமம் செவ்வாய்க்கிழமை , மத்தது சில நேரம் வரும்,வராம போகும், டெய்லி காலைல 8 மணிக்கு தந்தியும் கரனும் வந்துடும் ... அப்புறம் ராணினு ஒரு புக் ரெகுலரா   வரும்...
ராணியா??’( நான் கேள்விப்பட்டதே கிடையாது)
ஆமாப்பா குடும்ப புக்
கொஞ்சம் எடுங்க ?!’
10 புக் எடுத்துப்போட்டார்
‘5 ராணி 1 கரன் மொத்தம் 45 ரூபாய்னு சொல்லிக்கிட்டு 50 ரூபாயைகொடுத்தேன் .
தம்பி 5 ரூபாய் சில்லரை இல்லை, நாளைக்கு ஒரு பேப்பர் வாங்கிக்கோங்க !!!
சரிண்ணே!! குங்குமம் வந்தா எடுத்துவைங்க...!
“சரிங்க சார்,,,,”

Comments

  1. Ha ha h..books pithu pidicha romba kastam....idu 2 nd la irunde experience paniruken sara.

    ReplyDelete
  2. Ha ha h..books pithu pidicha romba kastam....idu 2 nd la irunde experience paniruken sara.

    ReplyDelete
  3. Ha ha h..books pithu pidicha romba kastam....idu 2 nd la irunde experience paniruken sara.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!