கர்நாடகா வெர்ஸஸ் தமிழ்நாடு பார்ட்- 4
- ஆச்சரியம் ஆனால் உண்மை !!!!1 நம்ம ஊர் முனியாண்டி விலாஸ், BANANA LEAF ல ஆரம்பிச்சு , முக்கு கடை வரைக்கும் சிக்கன் ஐட்டங்கள் எல்லாத்தோட விலையும் 100 ஐத்தொடும். அது தமிழனின் சாபக்கேடுகளில் ஒன்று , என்னதான் கர்நாடகால நம்ம ஊர் நாமக்கல் பக்கத்துல இருந்து கோழியை இம்போர்ட்(import) பண்ணினாலும் சிக்கன்பிரியாணி பிளேட் 40 ரூபாய் தான்.... சுவைக்க சுவைக்க நினைக்க நினைக்க இனிக்குதடா பிரியாணியும் அதன் விலையும் ..... மற்ற சிக்கன் ஐட்டங்களும் தமிழ்நாட்டோட கம்பேர்(compare) பண்ணினால் விலை குறைவே... சிக்கன் என்னோட ஆல் டைம் பேவரைட் அப்படிங்கிறதால FULL ENJOYMENT தான்....
- பலுவா!!!
‘அல்வா’ தெரியும் அது என்ன ‘பலுவா’ னு என்ன மாதிரி அப்பாவியா கேக்குறீங்களா????. “ பலுவா”
ஒன்னும் பெரிய டிஷ் எல்லாம் இல்ல , நம்ம ஊர் குஸ்காவோட ஒன்னு விட்ட சொந்தக்காரர் தான், குஸ்காவோட
கொஞ்சம் சுவை தூக்கல் , சைடிஷ் கூட மோர் தான்..... நம்ம ஊர்ல குஸ்காவுக்கு onion பச்சடி தருவானுங்க
.... இங்க onion பச்சடினா என்னானு கேக்குறானுவோ.....


Comments
Post a Comment