ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வர வேண்டியவள்... இப்படி சிதைக்கப்பட்டுவிட்டாள்... படிக்கும் பொழுது கண்ணீர் வருவதை அடக்க முடியவில்லை ... கட்டாயம் படித்துப்பாருங்கள்...http://www.eranatarasan.com/download/AYEESHA_tamil.pdf
இந்திய மட்டைப்பந்து அணியின் தொடர் வெற்றி ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இருபது ஓவர் மட்டைப்பந்து உலகக்கிண்ணத்திற்கான தொடக்க ஆட்டம் முதலே இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருவது கண்கூடு. இன்று சௌத்தாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மிக மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. குறிப்பிட்டு சொல்லும் படி பும்ரா மட்டுமே சிறப்பாக பந்து வீசினார். பேட்டிங் படு சொதப்பல். துபே கொஞ்சம் சுமாரன ஆட்டம். ஆனால், கொஹ்லியைப்போல் நின்று வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இந்திய அணியின் ஒழுங்கீனங்கள் அப்பட்டமாக வெளியே தெரிந்தது. அடுத்தடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்றால், உலகக்கோப்பையை இழந்து சிரிப்பாய் சிரிக்க வேண்டி வரும். பொருத்திருந்து பார்ப்போம்.
"யார் கண்டுபிடித்தது? யார் சொல்லியது? யார் பேச்சைக்கேட்டுப் பின்பற்றுகிறார்கள்?" என்று தான் தெரியவில்லை. புதிது புதிதாக எதையாவது தூக்கிக்கொண்டுத்திரிகிறார்கள். "ஏன்? எதற்கு? என்ற சொற்கள் எல்லாம் தடைசெய்யப்பட்டுவிட்டதா?" என்றெல்லாம் கூட யோசிக்கத் தோன்றுகிறது. என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்றெல்லாம் கேள்வி கேட்காமல், எல்லாவற்றையும் செய்யும் ஒரு அடிமைக்கூட்டமாய் பெரும்பான்மை சமூகம் எப்படி இருக்க முடியும்? முடிகிறது. கண்ணெதிரே உயிருள்ள ஜடமாய் ஆறறிவு மனிதனென பெருமைப்பீற்றிக் கொண்டே நடமாடிக்கொண்டிகிறது. கடவுள் விடயத்தில் கேள்வி கேட்டால் மனம் புண்படுகிறது என்று ஒரே போடாய் போட்டுவிடுகிறார்கள். மறுகேள்விக்கு மனம் வராது. போய்த்தொலைகிறது அவரவர் நம்பிக்கை என்று விட்டால், இன்று எல்லாவற்றிற்கும் அதையே தூக்கிகொண்டு வருகிறார்கள். ஆங்கிலப்புத்தாண்டு என்ற ஒன்று வருகிறது. ஒரே பரபரப்பு. பட்டையும் கொட்டையுமாய் ஒரு கூட்டம். பாட்டிலும், ஆடலும், பாடலுமாய் ஒரு கூட்டம். அவரவர் இஷ்டம். குறையொன்றுமில்லை. இதோ, இன்று தமிழ்ப்புத்தாண்டு. ஆங்கிலப்புத்தாண்டு போல் அவரவர் விருப்பத்திற்கு கொண்...
ஆமாம் , ஆமாம் பைத்தியக்கார உலகத்துல தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம். எல்லாரும் ஏதாவது ஒன்னு மேல பைத்தியமா பித்து புடிச்சி தான் திரிஞ்சிக்கிட்டு இருக்கோம். இதுல ஆண் பெண் அப்படிங்கிற பாரபட்சமே கிடையாது. எல்லாமே பித்துபிடிச்சு தான் திரியுரோம்.சரி எத்தனை வகையான பித்து இருக்குனு ஒரு சின்ன அலசல்..... காதல் பித்து மொபைல் பித்து பொன் பித்து பெண் பித்து ஷாப்பிங் பித்து(ஆன் லைனும் அடக்கம்) மண் பித்து பைக் பித்து சாப்பாடு பித்து பேஷன் பித்து பால் பித்து . டீ பித்து காபி பித்து இசை பித்து . கவிதை பித்து ஸ்நாக்சு பித்து ஆன்மீக பித்து . அரசியல் பித்து கம்ப்யூட்டர் பித்து சினிமா பித்து கலர் பித்து புத்தக பித்து ஸ்ஸ் அப்பப்பா யோசிக்க யோசிக்க லிஸ்ட் பெருசாகிட்டே போது ..இத்தோட முடிச்சுக்குவோம...
Comments
Post a Comment