கர்நாடகா வெர்ஸஸ் தமிழ்நாடு பார்ட்- 7



#ஆனியன் பக்கோடா டூ ஆனியன் வடை:
      நம்ம ஊர் டீக்கடைகளில் எல்லாம், மாலை வேளைகளில் சூடாக பொற பொற வென்று தனக்கே உரிய அதீத சுவையுடன் ஆனியன் பக்கோடா  விற்பனை ஜரூராக நடக்கும் .சரியான டைமிங் இல்லையென்றால் காலியாகிவிடும்.அடியேன் தீவிர ஆனியன் பக்கோடா வெறியன்.மாலை வேளைகளில் ஆனியன் பக்கோடாவும் கையுமாக என்னைப் பார்க்காதவர்கள் வெகு சிலரே..... அப்படிப்பட்ட பித்து எனக்கு, ஆனியன் பக்கோடா மேல்...  இங்கு அதையே ரீமிக்ஸ் செய்து ஆனியன்வடை( நான்கு வடை பத்து ரூபாய்) என்று விற்கிறார்கள். அதற்கு சைடிஷாக பச்சை மிளகாயும்,   (மிளகாயை விடவே மட்டேன்றானுங்க...!!) தோலுரித்த வெங்காயமும் தருகிறார்கள்.கால் பங்கு கடலைமாவு, கால் பங்கு கறிவேப்பிலை,அரை பங்கு வெங்காயம் கொண்ட கலவை.... நல்ல சுவை... விற்பனை நேரம் மாலை 4-6 வரை மட்டுமே, அதற்க்குள் சென்றுவிட வேண்டும்.. இல்லையென்றால் காலியாகிவிடும்.....சாதாரண பொட்டிக்கடை தான்... சுகாதாரம் பற்றி.... பச்..கப்சிப்..... அதைபத்தியெல்லாம் பேசக்கூடாது.... சுவையை பற்றி மட்டுமே இங்கே எழுதிக்கொண்டிருக்கிறென்...

ஆனால் ஒன்று நான் ஆனியன் பக்கோடா வாங்க செல்லும் பொழுது, சாரி, ஆனியன் வடை வாங்க செல்லும் பொழுது, பச்சை மிளகாய் மேல் எண்ணெய்யும் , உப்பும் கலந்த கலவையை பலர் காசு கொடுத்து வாங்கி தின்பதைக் காண்கிறேன்...காரத்த காசு கொடுத்து திங்குற கும்பல் இவனுங்க தான் என மனதிற்க்குள் எள்ளி நகையாடிக்கொள்வேன்.....     

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!