கர்நாடகா வெர்ஸஸ் தமிழ்நாடு பார்ட்- 6



#டீ கப்:( tea cup)
               கர்நாடகா வந்தவுடன் சாயா விலை 3 ரூபாய் என்றவுடன் குதூகலித்தேன். பட் சிறிது நேரம் தான். எல்லாம் டீ கப் சைஸால்.... இருமல் வந்தால் கொடுக்கும் சிரப் மூடியின் சைஸில் தான் டீ கப் இருக்கிறது. ஒரே மடக்கில் குடித்துவிடலாம்.நம்ம தமிழகத்தில் மட்டும் தான் கண்ணாடி டீ கிளாஸ் பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். இங்கே அந்த பெசிலிட்டி எல்லாம் கிடையாது . டீ கப் தான் பெரிய ஏமாற்றமே தவிர , மற்றவகையில் boost , complan , Horlicks அனைத்தும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது.....
பையா... ஏக் சாயா.... ஸ்ட்ராங்.......




#மிர்ச்சி(mirchi)
               உங்களுக்கு 'மிர்ச்சி' என்றால் என்னவென்று தெரியுமா? பிரபாஸ் நடித்த தெலுங்கு படம் தான் 'மிர்ச்சி' என டகால்டியாக பதில் கூறாதீர்கள்.... இங்கே மிளகாய் பஜ்ஜியைத்தான் 'மிர்ச்சி' என்று அழைக்கிறார்கள். சரியான மிளகாய் பைத்தியமா இருப்பானுங்க போலருக்கு , ஒருத்தன் என்னடானா?, Break Fast- ஆ பத்து மிளகா பஜ்ஜியைத் தின்னுட்டு வேலைக்கு போறான். மிளகா மேல கொஞ்சம் உப்பையும் , எண்ணெய்யையும் தடவி அதைத் தனியா தின்றானுங்க .... ஏன்டா டேய்?? உங்க நாக்கெல்லாம் செத்து போச்சா ? இல்ல அறுசுவைல ஒரு சுவை(காரம்) உங்களுக்கு இல்லாம போச்சா???... நீங்க தின்றத பாத்தா எனக்கு கண்ணுல தண்ணி வருது......   

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!