கர்நாடகா வெர்ஸஸ் தமிழ்நாடு பார்ட்- 5
#தோசை:
அடியேன் மிகவும் விரும்பும் உணவு பதார்த்தங்களுள்
, தோசைக்கு மிக
முக்கியமான இடமுண்டு , தமிழகத்தில் அதை தினமும் ருசிப்பேன் , நான் கல்லூரியில் இருந்து வந்தாலே அம்மா மாவை மொத்தமாக அரைத்து fridge-ல் ஸ்டாக் வைத்துவிடுவார்கள் . நான் வேண்டும் என்கிற பொழுதுகளில் எல்லாம் ஆனியன்
, நெய் , பொடி தோசை என வகை வகையாக ருசிப்பேன்.
அப்பேற்பட்ட தோசை பைத்தியமாகிய நான் கர்நாடகா வந்ததில் இருந்து தோசையை மறந்தே போய்விட்டேன்...
because of that கலப்படம் இன் தோசைமாவு. அடியேனுக்கு சோடா உப்பு
மற்றும் மைதா இரண்டுமே ஒத்துக்காது , அவை இரண்டையும் 5௦:5௦ அள்வுக்கு
கலக்கிறார்கள் , சோ தோசை முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.....
#பஸ் கட்டணம்:
நம்ம தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தின் பொழுது
நடந்த பஸ் கட்டண உயர்வு காரணமாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடந்தது நினைவிருக்கலாம். அப்பொழுது
அரசிடம் இருந்து வந்த பதிலில் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் பஸ் கட்டணம்
மிகக்குறைவு என்பது தெளிவாக தெரிவிக்கப்பட்டது.அதை அடியேன்அப்பொழுது ஒத்துக்கொள்ளவில்லை, இங்கே கர்நாடகா வந்த பிறகு
தான் உண்மை நிலவரம் விளங்கிற்று. “பஸ் கட்டணம் நம்ம தமிழ்நாட்டில் தண்ணீர் விலை
என்றால் , இங்கே கர்நாடகாவில் பீர் விலை “ அதை ஓர் உதாரணத்துடன் விளக்குகிறேன்.
தமிழகம்:
ஜெயங்கொண்டம் டூ திருச்சி...மொத்த தூரம் 1௦௦
கி.மீ
பஸ் கட்டணம் = ஆர்டினரி பஸ் - 40 ரூபாய்
= எக்ஸ்பிரஸ் – 54 ரூபாய்
நோட்: கி.மீ-க்கு ஒரு ரூபாயை விட குறைவாக
உள்ளது
கர்நாடகா:
பெல்லாரி டூ தொரனகல்லு ..
மொத்த தூரம் 30 கி.மீ
பஸ் கட்டணம் = 33 ரூபாய்(
ஆர்டினரி எது எக்ஸ்பிரஸ் எது வித்தியாசம் காணஇயலவில்லை )
நோட்: கி.மீ-க்கு ஒரு ரூபாயை விட அதிகம்
இப்பொழுது தெரிகிறதா தமிழகத்தில்
போக்குவரத்துக்கழகம் ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது என்று, பிழைக்கத்தெரியாதவர்கள்
...!!!!



Comments
Post a Comment