காபி வித் கோட்சே..!!




ஒரு மாலை வேளையில் வழக்கம் போல் இணையத்தை மேய்ந்துகொண்டிருந்தேன். அப்பொழுது சொக்கன் அவர்களது வலைப்பதிவில் தன்னுடைய “ மகாத்மா காந்தி கொலைவழக்கு” குறித்த புத்தகத்தின் சில காட்சிகளை வெட்டி ஒட்டி டிரெய்லர் காட்டி இருந்தார்.

புத்தகமே மகாத்மா காந்தி கொலை வழக்கு பற்றியது தான், அதனால் மகாத்மாவுக்கு இணையாக கோட்சேவும் புத்தகம் முழுவதும் விரவிக்கிடக்கிறார் என்பது படித்ததில் தெரிகிறது.இவர் குறிப்பிட்டுள்ள குறிப்புகளிலே கோட்சே குறித்த முழு அறிமுகம் நமக்கு கிடைக்கிறது.

(கோட்சேவின் பிறப்பு , குணநலன்கள், அருள் வழங்கும் சக்தி, பல்வேறு தொழில் புரிந்து எதிலும் உருப்படாமல், இந்துத்துவா கொள்கையில் இறங்கியது, காந்தியின் கொள்கைக்கு மாறாக திரும்பி, பின் அவரையே கொலைசெய்யத் துணிந்தது வரை அழகான குறிப்புகள். குறிப்புகளே இவ்வளவுவிஷயங்களையும் வியப்பையும் தருகிறதென்றால் புத்தகம் எவ்வளவு தகவல்களைக் கொண்டிருக்கும் என கற்பனை செய்துக் கொண்டிருந்தேன்.....)

NATHURAM KOTCHE
படித்துக்கொண்டிருக்கும் பொழுதே ஒரு குறிப்பிட்ட பாரா என்னை ஷாக்ஆக்கி பழைய நினைவுகளில் மூழ்கச்செய்தது. கோட்சேவின் பண்புகளைப்பற்றியும் , குணநலன்களைப்பற்றியும் பேசிய அந்தப் பாராவில் குறிப்பிட்ட சில வரிகள் என் இயல்போடு பொருந்துவதைக்கண்டு வியந்து போனேன். கோட்சேவிடம் சொல்லிக்கொள்ளும்படியான கெட்டப் பழக்க வழக்கங்கள் ஏதும் இல்லை, அப்படிக்கூற வேண்டுமானால் , கோட்சே ஒரு “காபி பித்து”....சதா எந்நேரமும் காபி, காபி என காபி குடித்துக்கொண்டே இருப்பாராம் .. காபிக் குடிக்க இரண்டு கி.மீ. நடக்க வேண்டும் என்றாலும் சளைக்காமல் நடப்பாராம்... நிறுத்துங்கள் இங்கே தான் என் நினைவுகள் தொடங்கியது...

கல்லூரி காலத்தில் எதேச்சையாக ஒரு காபி சம்பந்தப்பட்ட short film பார்க்க நேர்ந்தது. அது ஒரு சைக்கோ கதை .. கதையின் ஹீரோ ஒரு சைக்கோ அல்லது காபி பைத்தியம் என எவ்வாறு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். படம் முழுவதும் அவர் வித விதமாக காபி குடிப்பதையும் , வித விதமான காபிதேடி அலைவதையும், இறுதியில் காபிக்காக மனைவியையே கொலை செய்வதையும் 20 நிமிட அளவில் காட்சிப்படுத்தி இருந்தார்கள். 
படத்தின் எந்த ஒரு கருத்தும் எனக்கு புரியவில்லை, சொல்லப்போனால் படத்தின் தலைப்பே இப்பொழுது எனக்கு ஞாபகம் இல்லை . ஆனால் படம் பார்த்தப் பிறகு ஒரு புது வெறி எனக்குள். “காபி வெறி”... அதுவரை பூஸ்ட், காம்ப்ளான். ஹார்லிக்ஸ் மீது தான் தீராக்காதல் கொண்டிருந்தேன்.அதன் பிறகு என் கவனம் காபி மீது திரும்பியது, செல்லும் இடங்களில் எல்லாம் காபியையே தேடினேன்,காபியையே ஆர்டர் செய்தேன், காபியையே உணவாக்கிக்கொள்ள சிறிதும் தயங்கவில்லை , காபியை அருந்தியதும் வரும் ஒரு வித மயக்கத்திற்கு அடிமையாகிப் போனேன். பல இடங்களில் காபியை அருந்திய எனக்கு எல்லாம் ஒரே சுவையாகவே தெரிந்தது.காபிக்கு பெயர் போன கும்பகோணத்தில் கூட தனி சுவை தெரியவில்லை . ஒரு வேளை நான் சரியான இடத்தில் அருந்தாமல் இருந்திருக்கலாம்.




    என்னளவில் இரு இடங்களில் காபி அருந்தியது மறக்க இயலாதது . முதலாவது, குரோம்பேட்டையில் உள்ள ஐம்பது வருட பாரம்பரியமிக்க ஐயங்கார் (அ) ஐங்கரன் ( பெயர் குழப்பத்திற்கு மன்னிக்கவும்) காபி ஷாப். இரண்டாவது தேனி குரங்கனி மலையில் டைட்டஸ் அம்மா போட்டுக்கொடுத்த வரட்டுகாபி . என்னளவில் இவை இரண்டும் தனித்துவம் வாய்ந்தவை , எப்பொழுது நினைத்தாலும் இவை இரண்டின் சுவையும் என் நாவினில் வந்து செல்பவை ,ஏனோ , சில காலங்களுக்குப்பிறகு காபியையே மறந்துப்போனேன்.. இப்பொழுது இதைப்படித்தவுடன் என்னுள் உறங்கிக்கிடந்த காபி பைத்தியம் மீண்டும் விழித்துக்கொண்டான்.. என் மனம் காபி காபி என அல்லாட ஆரம்பித்துவிட்டது,விடுங்கள் நாம் டைட்டிலுக்கு வருவோம்....


இப்பொழுது கோட்சே உயிரோடு இருந்தால் இந்த விஜய் டீ.விக் காரர்கள் “காபிவித் டீ.டீ “ க்கு பதிலாக, கோட்சேவை வைத்து  “ காபி வித் கோட்சே” நடத்திக்கொண்டிருப்பார்கள். வெற்றிகரமாக 2, 3 சீசன்கள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் . யார் கண்டது...!!!

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!