போலீஸ் எனும் வழிப்பறி கும்பல்....



     

தமிழகத்தில் சந்து பொந்துகளில், வெயில் நேரத்தில் மரத்தடியில், முக்கிய திருப்பங்களில் , டிராபிக் சிக்னல்களில் காக்கிசட்டை ஜாம்பவான்கள் எந்நேரமும் கைகளில் லத்தியோடு போர்க்குற்றவாளிகளைப்பிடிப்பது போல், இந்த டூவீலர் வண்டிக்காரர்களை லாவகமாக ஓரங்கட்டி வசூல் வேட்டை நிகழ்த்துவதை கண்டிருக்கலாம், அல்லது நீங்களும் கொடுத்திருக்கலாம். இந்த கலெக்ஷன் விஷயத்துல தமிழ்நாட்டு காவல்துறை மட்டுமில்லை, கர்நாடக காவல்துறையும் சலைச்சவங்க இல்லை, இங்கேயும் வசூல் வேட்டைதான்...
      எனக்கு எப்பொழுதும் ஒரு சந்தேகம் உண்டு, இவர்கள் ஏன் பிச்சைக்காரர்கள் போல் எப்பொழுதும் கையேந்திக்கொண்டிருக்கிறார்கள் என்று.. அரசு இவர்களுக்கு முறையாக ஊதியம் கொடுப்பதில்லையா?? அல்லது இவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முறை தவறி நடந்து கொள்கிறார்களா???... இதில் பெரும்பாலும் இரண்டாவது கூற்றே முற்றிலும் பொருந்தும் .
      ஏனென்றால் அவர்கள் வேலையில் சேர்வதற்கு கொடுத்த அமௌன்டை  இவ்வாறு தான் வட்டியும் முதலுமாக வசூல் செய்கிறார்கள், போக்குவரத்து காவல்துறையை விட இவர்கள் போக்குவரத்து விதிகளை சரியாகக்கூறி  அல்லது நமக்கு தெரியாத ஏதாவதொன்றைக் கூறி வசூல் புரிந்துவிடுவார்கள். வசூல் புரியும் அமௌன்டை விட அவர்கள் பில் போடும் அமௌன்ட் வெகு சொற்பமே .. கேட்டால் மேலிடம் வரை கொடுக்க வேண்டும், எங்களுக்கு 20 ரூபாய் கிடைத்தாலே அதிகம் என புலம்பவேறு செய்வார்கள்.
 தலைக்கு 100 ரூபாய் என முறை தவறி சம்பாதிக்கிறார்கள் என்றால் . ஒரு நாளைக்கு பத்து பேர் என வைத்துக்கொண்டாலும்  ஆயிரம் ரூபாய் ஆயிற்று , மாதம் முப்பது ஆயிரம் ரூபாய். வருடம் மூன்று லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாய் வருகிறது.. சம்பளத்தை விட கிம்பளம் அதிகம்..மிகப்பெரியக் கொள்ளை....
வசூலிலும் வகைகள் உண்டு , முதலில் பெரியவர்கள் . பெண்கள். பெண்களை உடன் அழைத்துச்செல்கிறவர்கள் இவர்களை விட்டு விடுவார்கள், இரக்கமுள்ளவர்களாக காட்டிக்கொள்கிறார்களாம்!!! அவர்களது முக்கிய இலக்கு, இளைஞர்கள், காதல் ஜோடிகள், மற்றும் டாஸ்மாக் தமிழன்கள். இவர்கள் அல்லாது கனரக வாகனங்களுக்கு தனி வசூல்.இதில் அதிகம் வசூலிக்கப்படுவது காதல் ஜோடிகளிடம் தான்.வீட்டில் கூறிவிடுவேன் என்ற மிரட்டல் தான் அவர்களது ஆயுதம். இது குறித்த தோழி ஒருத்தியின் அனுபவத்தை ஒரு பதிவாக தனியே போடுகிறேன்.பாஸ்போர்ட் முதல் குற்றப்பிண்ணனி இல்லாத சான்றிதழ் வரை அனைத்துக்கும் கப்பம் கட்டினால் தான் காரியம் நடக்கும் ...
எழுதும் பொழுதே வார்த்தைகள் எல்லைமீறிப்போவதால் இத்தோடே முடித்துக்கொள்கிறேன்.போலீஸிடம் மாட்டித்தப்பித்த எங்களுடைய மற்றொரு அனுபவத்தை இங்கே படிக்கலாம்...

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!