ஹமாஸ்....!!!


இப்பொழுது இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவதிகளுக்கெல்லாம் முன் தோன்றிய மூத்தகுடிகள். யார் இவர்கள் ? ஒரு புறம் தீவிரவாதம் என்ற முத்திரையும் மறுபுறம் போராளித்துவம், தேசவிடுதலைக்காக போராடுபவர்கள் என்ற பெயரோடும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவர்களின் கதை தான் என்ன?
காலம் காலமாக வாழ்ந்து வந்த ஒரு இடத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆக்கிரமித்து, அவர்கள் வாழ்ந்ததற்கான தடையமே இல்லாமல் செய்ய முற்படும் போது சாதாரணமாக  வாழும் எவருக்கும் வரக்கூடிய கோபம் தான் ஹமாஸுக்கான துவக்கப்புள்ளி. போராளி இயக்கம் தான் என்ற போதும் மதவாதமும், ஆயுதமும் அவர்களை தீவிரவாதிகளாக கண்முன் நிறுத்துகிறது.
இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினை பற்றிய சிறு அறிமுகமும்,ஹமாஸ் பற்றிய முழு விவரங்களையும் இந்த புத்தகம் நமக்கு வழங்குகிறது.
புத்தகம்: ஹமாஸ்... பயங்கரத்தின் முகவரி
ஆசிரியர்: என்.சொக்கன்
பதிப்பகம்: கிழக்கு

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!