அக்பரின் விளையாட்டு...!
ஒரு நாள் பீர்பால் அக்பரிடம், ‘இன்றுநீங்கள் எதை செய்கிறீர்களோ அது நாளை உங்களுக்கு திரும்பி வரும்’ என்று கூறினார். இதைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பிய அக்பர் , பீர்பால் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார்.பீர்பால் தன் பக்கத்தில் இருந்த சேவகன் கண்ணத்தில் அறை விட , அது மாறி மாறி நகர் முழுவதும் இந்த விளையாட்டு தொடர்ந்திற்று.
இரவு அந்தப்புரம் வந்த அக்பரின் கண்ணத்தில் ராணி ஓங்கி ஒரு அறை கொடுத்தார். அதற்கு’ என்ன ஆயிற்று?’ என அக்பர் வினவ , இன்று நகர் முழுவதும் இதே விளையாட்டு தான். எனக்கு பணிப்பெண் கொடுத்த அறையை நான் உங்களுக்கு கொடுத்துவிட்டேன் என்று கூற அதிர்ந்து போனார் அக்பர். தான் விளையாட்டாய் செய்த ஒரு செயல் இவ்வளவு தூரம் தனக்கு திரும்பி வரும் என அவர் எதிபார்த்திருக்கவில்லை..அன்றுமுதல் ஒவ்வொருகாரியத்தையும் யோசித்து செய்யலானார்.
#நன்றி –அக்பர் நாமா
Comments
Post a Comment