வேடிக்கை பார்ப்பவன்...
அனுபவம் ஏற்படக்கூடிய சில வழிகளில் வேடிக்கைக்கு மிகப்பெரிய இடம் உண்டு.கேளிக்கையாக தோன்றினாலும் வேடிக்கைக்கு தமிழகத்தில், இந்தியாவில் இருக்கும் ஆர்வம் மற்ற நாட்டினருக்கெல்லாம் இருக்குமா என்பது சந்தேகமே. அடுத்தவன் வீட்டு பிரச்சினைய மட்டும் வேடிக்கை பார்க்க தெரிந்த நமக்கு தனக்குள் இருக்கும் இன்னொருவனை வேடிக்கை பார்க்க தெரிந்திருக்கவில்லை.ஒரு சிலர் மட்டுமே தன்னையே வேறொருவனாய் தள்ளி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நா.முத்துக்குமார் . தன் வாழ்வில் தொண்டைக்குள் சிக்கிய மீன் முள்ளாய் குத்திக்கொண்டிருந்த சில நிகழ்வுகளை வேறொருவனாய் தள்ளி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார்.
புத்தகம்: வேடிக்கை பார்ப்பவன்
ஆசிரியர்: நா.முத்துகுமார்
பதிப்பகம்:விகடன்
Comments
Post a Comment