அங்காளி, பங்காளி சண்டை.....
என்ன தான் சண்டையா இருந்தாலும் வீட்ல ஒரு விசேஷம்னா, அங்காளி, பங்காளி எல்லாம் ஒன்னு சேர்ந்துடுவானுங்க, பட் இந்தியா பாகிஸ்தான் மேட்டர் மட்டும் விதி விலக்கு.இந்தியால ஒரு விசேஷம்னா எப்படி அதை பாம் வச்சி சீர் குலைக்கலாம்னு தான் யோசிக்குறானுங்க நம்ம பங்காளிஸ். அப்படி என்னதான்யா பிரச்சனைனு கேட்ட காஷ்மீர்னு பொத்தம் பொதுவா சொல்லுவானுங்க, ஆனால் அம்புட்டும் மதத்தோட தொடர்புடையது.முற்றிலும் மத அடிப்படைவாதம். ஜனநாயகம்னா என்னனே தெரியாம வளர்ந்துட்டாங்க நம்ம பங்காளீஸ். ஏன் அவங்க மனசுல இவ்வளவு வெறினா, எல்லாம் அவங்க நாட்டு அரசியல்வாதிங்க செஞ்சது தான். அவங்க அரசியல் வரலாற்றை படிச்சா நமக்கு முழுசா புரியும்.
சுதந்திரம் வாங்குன அடுத்த வருசமே பாகிஸ்தான் தந்தை ‘ஜின்னா’வும்,இந்தியாவோட தந்தை ‘மகாத்மாவும் ‘ இறந்தது , இரண்டு நாட்டுக்குமே சாபக்கேடு. பாகிஸ்தான்ல ஜின்னா மறைவுக்கு அப்புறம் உண்மையா ஜனநாயகம்னா என்னனே அந்த மக்களுக்கு தெரியாம பாத்துக்கிட்டனுங்க அந்த நாட்டு அரசியல்வாதிங்க.அதனால தான் மவுண்ட் பேட்டன் இப்படி சொன்னார்’ ஜின்னா மட்டும் இவ்வளவு சீக்கிரம் நம்மல விட்டுபோவார்னு தெரிஞ்சா நாங்க பிரிவினைக்கு ஒத்துக்கிட்டு இருந்துருக்கவே மாட்டோம்னு.’
இந்த பாகிஸ்தான் அரசியல் இருக்கே வாழ்க்கை ஒரு வட்டம்னு கரெக்டா ப்ரூப் பண்ணும்.எப்படினா?
மக்கள் தேர்ந்தெடுத்த அரசை ராணுவம் கலைக்கிறது.ராணுவத்தை சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கிறது.சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை ஜனாதிபதி பந்தாடுவார்.ஜனாதிபதியை பிரதமர் கவிழ்க்கிறார் . பிரதமரை ராணுவம் கவிழ்க்கிறது. சுத்தி சுத்தி இது தான் ரொட்டீனா நடக்கும்.
பாகிஸ்தான் உளவுத்துறைனு ஒன்னு வச்சிருக்கிறதே இந்தியாவை கவனிக்கத்தான்.நேரடிப்போர் அப்படின்றது பாகிஸ்தானுக்கு காய்ச்சல் வரவைக்கக்கூடியது. நேரா அது போர சந்திக்குற பழக்கமே கிடையாது. அந்த காலத்துல பதான் பழங்குடி மக்களை அனுப்பி போரை ஆரம்பிச்சதுல இருந்து நேரா ஒரு போதும் போர் நடத்துற பழக்கமே கிடையாது. அதுக்கு அமெரிக்க ஆதரவு இருக்குன்ற மெதப்பு வேற.எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் அடைக்கலம் நம்ம பங்காளிதான்.
இன்னைக்கு காஷ்மீர்ல நடக்குற பிரச்சினைக்கு எல்லா காரணமும், பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர்ல இருந்து செயல்படுற தீவிரவாத இயக்கங்கள் தான்னு அடிச்சு சொல்லலாம். இவ்வளவும் ஏன் செய்யறாங்கனா அவங்களுக்கு காஷ்மீர் வேனும் , காஷ்மீர் ல இருக்குற முஸ்லீம்ஸ சாக்கா வைச்சு கஷ்மீர் பேர சொல்லி அரசியல் பண்ணனும் . அவ்வளவு தான்.
புத்தகம்: பாகிஸ்தான் ஒரு புதிரின் சரித்திரம்
ஆசிரியர்: பா.ராகவன்
பதிப்பகம்: கிழக்கு
Comments
Post a Comment