சென்னையில் ஒரு மீட்டிங்...!!!


சந்திப்பு என்றாலே எனக்கு எப்பொழுதும் சந்தோஷம் தான். எனது கல்லூரி காலம் வரை சந்திப்பு அல்லது மீட்டிங் என்பது கார்காலம் தான். ஜில்லென்ற ஒரு கலவரம். அதாகப்பட்டது வேலையில் சேரும் வரை மீட்டிங் ஒரு ஆனந்தத் தொல்லை. ஆனால் வேலைக்கு சேர்ந்த முதல் மீட்டிங்கிலேயே மீட்டிங் மீது இவ்வளவு வெறுப்பு வரும் என ஒரு கணநேரமும் யோசித்ததில்லை. இனி எனக்கு ஆங்கிலத்துல பிடிக்காத ஒரே வார்த்தை “மீட்டிங்டா”. கொய்யால மீட்டிங்காடா இதுக்கு பேரு. உங்களால மீட்டிங் மேல இருந்த மரியாதையே போச்சுடா. சுமால் பாய்ஸ். இதப் போன்லயே சொல்லியிருக்கலாம்டா டேய்.!! சரி முதல்ல மீட்டிங்ல என்ன நடந்துச்சுனு பார்ப்போம்.
நாலு நாளைக்கு முன்னாடியே மீட்டிங் ஞாயிற்றுகிழமை எவன்லாம் வர்றீங்கனு சரியா மெயில் அனுப்புங்கனு ,மெயில் அனுப்பிட்டனுங்க. இதுக்கெல்லாமா மெயில் அனுப்பறது. சிறுவர்கள் எல்லாத்துலையும் விளையாட்டு தான். நானும் , சாந்த் அண்ணனும் கெளம்புனோம். சென்னை டூ பெல்லாரி. அறுநூற்று சொச்சம் கி.மீ. சுமார் பன்னிரண்டு மணி நேரம் பயணம் செஞ்சு( ஸ்லீப்பர் கோச் தன்பா! ) போய் சேர்ந்தோம்.
வேலையில் சேர்ந்ததுல இருந்து இது தான் பர்ஸ்ட்(first) மீட்டிங். இதுக்கு முன்னாடி வரையும் மீட்டிங்னா பிரண்ட்ஸோட சேர்ந்து அரட்டை அடிக்கிறது, ஊர் சுத்துறது,மூச்சு முட்ட திண்றது, பர்த்டே பார்ட்டி, தியேட்டர் போறதுனு வகை வகையா பர்சனல் மீட்டிங் மட்டும் தான் அட்டன்ட்(attend) பண்ணியிருக்கிறேன். பர்ஸ்ட் டைம் இன் ஹிஸ்டரி ஆப் சரவணக்குமார்ல இது தான் முதல் அபிசியல்(official) மீட்டிங்.
மீட்டிங்க கூட விவரமா ஞாயிற்றுகிழமை பார்த்து வச்சிருக்கானுங்க பவுடர் பாய்ஸ்(powder boys-பொடிப் பசங்க).வொர்க்கிங் டேல(working day) வைங்கடானு கேட்டா, வேலை கெட்டுட கூடாதுனு அலப்பறை பண்ணுவானுங்க. சரிப் போய் தொலையிறானுங்க.! மீட்டிங்குக்கு வந்து போற செலவெல்லாம் கம்பெனில கிளெய்ம்(claim) பண்ணிக்கலாம் அப்படின்றது மட்டும் தான் குட் நியூஸ். மீட்டிங்க அட்டண்ட் பண்ணின குரூப்ல நாங்க ரெண்டு பேரும் தான் மட்டமா டிரஸ் பண்ணிட்டு போனது. ஷு கூட போட்டுட்டு போலனா பாத்துக்கோங்க.!!
வர வர கம்பெனி மீட்டிங் கூட , அரசியல் மீட்டிங் மாதிரி அறிவிப்புகளுக்காகவே நடத்துறானுங்க, பத்து மணிக்கு மீட்டிங்னு சொல்லிட்டு, எல்லாம் பதினொரு மணிக்கு மேல தான் வந்து சேர்ந்தானுங்க. HR தூங்கி எழுந்து அப்படியே வந்துட்டாப்புல. மீட்டிங்னா ஸ்நாக்ஸ் இல்லாம இருக்குமா?  ஒரு டீ , தட்டு நிறைய சால்ட் பிஸ்கட் . அப்படியே தின்னுட்டு இருக்கும் பொழுது, ஒருத்தன் உள்ள வந்தான். எல்லாம் செல்ப் இன்ட்ரோ(self intro) கொடுங்கனு சொல்லிட்டு ஒரு ஓரமாப் போய் ஒக்காந்துட்டான். இந்த செல்ப் இன்ட்ரோவ கண்டு புடிச்சவன புடிச்சு செருப்பால அடிக்கனும். சின்ன வயசுல ஸ்கூல்ல டீச்சர் யாராச்சும் வரலைன்னா, எல்லாரும் வாய்ப்பாடு எழுதுங்கனு பக்கத்து கிளாஸ் டீச்சர் வந்து சொல்லிட்டு போவாங்கல,அந்த மாதிரி தான் இதுவும்.
`மேனேஜர் வந்தார் , பத்து நிமிஷம் பேசுனார், சேப்டி(safety) ஆபிசர் கொஞ்சம் கிளாஸ் எடுத்து போர் அடிச்சார். ஹாப் ஆன் ஹவர்ல(half an hour) மீட்டிங் ஓவர். மீட்டிங்ல மூணே விஷயத்தை தான் சொன்னானுங்க.அது இது தான்.
கம்பெனி மேன் பவரை கொறைக்க போகுது . ஒழுங்கா வேலை செய்யலைனா சீட்ட கிழிச்சுடுவோம்.
கம்பெனியோட புராபிட்ட(profit) பத்து பர்சன்டேஜ் அதிகமாக்கனும்.
ஏதாச்சும் சேப்டி(safety) பிராப்ளம் வந்துச்சுனா , சீட்ட கிழிச்சுடுவோம்.
      ஹெல்மட் போடாம வண்டியில போனா சீட்ட கிழிச்சுடுவோம்னு சொல்ற ஒரே கம்பெனி நம்மளுது தான். மீட்டிங் ஓட ஹைலைட்டே சிக்கன் பிரியாணியும் , பிஸ்(fish) பிரையும் தான். நம்புக்கப்பா சாமி சத்தியமா இது அரசியல் மீட்டிங் இல்ல.
சாயங்காலம் பாஸுக்கு போன் பண்ணி ஏன் சார் மீட்டிங் வரலைனு கேட்டதுக்கு , ஒரு டயலாக்(dialogue) விட்டார் .அதுக்கப்புறம் சிரிச்சு முடிக்க ரொம்ப நேரம் ஆச்சு. அது இது தான்.
“ சரவணா நான் மட்டும் மீட்டிங் வந்திருந்தா, சீனே வேற மாறி போயிருக்கும்”.( வடிவேலு வாய்ஸ்ல படிச்சு சிரிக்கவும்..!)

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!