அக்பர்
எனக்கு நீண்ட நாட்களாக இருந்த ஒரு சந்தேகம்
, இந்த திரைப்படங்களில் எல்லாம் போடுகிறார்களே ‘உண்மை
சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று, அதை
எவ்வாறு நாம் நம்புவது? ஒரு வேளை ஏன் அவர்கள் பொய் சொல்லி இருக்க கூடாது என்றெல்லாம் எண்ணி
அதன் உண்மைத் தன்மையை அடிக்கடி ஆராய்ந்து பார்ப்பேன். பல டுபாக்கூர்களாகவும்,
அரிதினும் அரிதாய் சில நிஜமாகவும் அமைவது உண்டு.அதில் ஒன்று தான் ஜோதா அக்பர்.
படம் பார்த்த நாள் முதல் அக்பர் பற்றிய
வரலாற்றை அறிந்து கொள்ள ஆவல் கொண்டேன். கிட்டிய புத்தகங்கள்பெரும்பாலும் ஒட்டு
மொத்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தினை பற்றி பேசியதே தவிர,
பேருக்கு ஒரு சிறு அறிமுகத்தை தந்ததே தவிர அக்பர் பற்றி முழுதாக அறிந்து கொள்ள
வழிவகுக்கவில்லை. அக்பர் நாமா இருக்கிறதே என்று நீங்கள் கூறலாம், ஆனால்
அதன் உண்மைத்தன்மை மீது சற்று குழப்பம். ஏனென்றால் அது அக்பர் காலத்தில் எழுதப்பட்டது.சாதனையே
செய்யாமல் சாதனை செய்ததாக போஸ்டர், பேனர் ஒட்டிக்கொள்ளும் தற்பொழுதைய அரசியல்வாதிகளைப்போல அவரும்
இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா?. ஆகையால் தான் அக்பர் நாமாவை சீண்டவில்லை..
கடந்த மாதம் டீசி வாங்க கல்லூரிக்கு
செல்லும் வேளையில் அக்பர் குறித்த புத்தகம் ஒன்ரு கண்ணில் அகப்பட்டது. சொக்கன்
அவர்கள் எழுதிய அந்த புத்தகம் அக்பர் குறித்த தெளிவான அறிமுகத்தை தருகிறது.
உட்கார்ந்தால் ஒரே மணி நேரத்தில் படித்து முடித்துவிடலாம், அக்பர்
குறித்த சிறு அறிமுகம் தானே தவிர முழு வாழ்க்கை வரலாறும் அல்ல.கிடைத்தால் படித்துப்
பாருங்கள்.
புத்தகம்:அக்பர்
ஆசிரியர்: என்.சொக்கன்
பதிப்பகம்: கிழக்கு

Comments
Post a Comment