யார் நாம்?
விளம்பரத்துக்கும், புகழுக்கும் வித்தியாசம் அறியாதவர்கள் நாம்..
மகிழ்ச்சிக்கும், பணத்துக்கும் வித்தியாசம் அறியாதவர்கள் நாம்...
அடக்கத்துக்கும், அல்டாப்புக்கும் வித்தியாசம் அறியாதவர்கள் நாம்..
படிப்புக்கும், பட்டறிவிற்க்கும் வித்தியாசம் அறியாதவர்கள் நாம்...
கோபத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும் வித்தியாசம் அறியாதவர்கள் நாம்..
பேச்சுக்கும்,சத்தத்துக்கும் வித்தியாசம் அறியாதவர்கள் நாம்...
பாசத்துக்கும், பகைக்கும் வித்தியாசம் அறியாதவர்கள் நாம்...
கருணைக்கும், கர்வத்துக்கும் வித்தியாசம் அறியாதவர்கள் நாம்..
ஹீரோவிற்க்கும்,ஜீரோவிற்க்கும் வித்தியாசம் அறியாதவர்கள் நாம்...
காதலுக்கும், கபட நாடகத்திற்க்கும் வித்தியாசம் அறியாதவர்கள் நாம்...
விவசாயத்திற்க்கும், வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பையும் அறியாதவர்கள் நாம்.....
செய்முறைக்கும்,மனனம் செய்வதற்க்கும் உள்ள வித்தியாசம் அறியாதவர்கள் நாம்...
கவலைக்கும், கட்டற்ற செயல்களுக்கும் வாழ்க்கையை தொலைப்பவர்கள் நாம்...
மதுவிற்க்கும், மாதுவிற்க்கும் அடிமையாகிப்போனவர்கள் நாம்...
பொன்னையும், பொருளையும் போதையாக்கிக்கொண்டவர்கள் நாம்...
உழைப்பிற்க்கும் , ஓய்விற்க்கும் நேரம் ஒதுக்கத் தெரியாதவர்கள் நாம்...
பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆயுளை ஒழிப்பவர்கள் நாம்.....
எதையுமே ஒழுங்காக செய்யத்தெரியாத நமக்கு , செய்யத் தெரிந்ததெல்லாம், புறங்கூறுதல், மட்டம் தட்டுதல், பொறாமை கொள்ளல், எள்ளி நகையாடல்,உள்ளொன்று வைத்து புறமொன்று கூறுதல், கிசுகிசு ரசித்தல், கிண்டல் கேலி, மத வெறி ,சாதி வெறி, நிற பேதம், சினிமாத்தனம் , சில்லறைத்தனம், ஏமாற்றித்தள்ளல்,கனவு மட்டுமே காணுதல், ........ அடுத்தவன் அந்தரங்கத்தை சந்தி சிரிக்க வைத்தல்... சொல்லிக்கொண்டே செல்லலாம்,… திருந்திதொலைங்கடா....!!!
Comments
Post a Comment