பாலிடிக்ஸ் பஞ்சாமிர்தம்..!-2
கலர் கலர் சட்டை அணிந்தால் மோடியைப் போல் ஆட்சியைப் பிடித்து விட முடியுமா?-ஸ்டாலினிடம் வைகோ கேள்வி # காந்தியைப் போல் நடை பயணம் மேற்கொண்டால் அடுத்த காந்தி ஆகிவிட முடியுமா? –வைகோவிடம் சாமானியன் கேள்வி
ஊழல் செய்த அமைச்சரை ஊரைக்கூட்டி டிஸ்மிஸ் செய்த கெஜ்ரிவால் –செய்தி # இங்க அப்படி செஞ்சாஅமைச்சரவைல ஈ, காக்கா கூட மிஞ்சாது
அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம்- ஈ.வி.கே.எஸ் #இதுக்கு பேர் தான் சொந்த டவுசர் கிழிஞ்சா கூட இருக்கவன் டவுசரையும் சேர்த்து கிழிக்கிறது
ஆவின் பால் ஊழல் வழக்கு குப்பையில் கிடக்கிறது- கருணாநிதி#தாத்தா வாய வச்சிகிட்டு சும்மா இருங்க அப்புறம் அவங்க 2ஜி பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க
“எட்டுபட்டி” பஞ்சாயத்து தான் தற்பொழுதைய சட்டசபை- துரைமுருகன்
#நாட்டாமை சொன்னா சரியாத் தான் இருக்கும்
நாங்க ஆட்சிக்கு வந்தால் கரெப்ஷன், கலெக்ஷன்,கிமிஷன் இருக்காது சொல்கிறார் மு.க.ஸ்டாலின்
#தம்பி நெசமாத்தான் சொல்லுதா .பாட்டிக்கள் மைண்ட் வாய்ஸ்
Comments
Post a Comment