கருவாச்சி காவியம்...!!!


நீண்ட நாட்களாக படிக்க நினைச்சு சோம்பேறித் தனத்தால படிக்காம இருந்த புத்தகம். இப்ப தான் ஒரு இது வந்து படிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல மொழி நடை ரொம்ப சோதிச்சுடுச்சு பொறுமையை , இடையில மூடி வச்சுடலாமானு கூட யோசிச்சேன். நாலு எப்பிசோடு தாண்டுனதும் அந்த மொழிடை பழகிப் போச்சு. கருவாச்சி அப்படின்ற கதாபாத்திரம் வாழ்க்கை முழுவதும் அனுபவிச்ச கொடுமைகளை ,சாரி, அனுபவங்களை அழகாக தொகுத்திருக்கிறார் வைரமுத்து. தற்காலத்துல சிறு சிறு விஷயங்களுக்குலாம் தற்கொலைக்கு முயல்கிறவர்களுக்கு கருவாச்சி ஒரு பாடம்.  கட்டாயம் படிக்க வேண்டிய பாடம். கணவனால் கைவிடப்பட்டு , பிள்ளையை போதைக்கு பறிகொடுத்து, அப்பன் இல்லாமல் ஆத்தா வளப்புல வளந்து, நிலத்தை இழந்து, கண்ணீரையே காதலித்து  வாழ்ந்த ஒரு சாதாரணப் பெண். எல்லாத்தையும் இழந்து வாழ்ந்து காமிச்சதுல இருக்கு அவளோட வைராக்கியம்..கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்..

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!